ஆப்நகரம்

இப்படி ஒரு மகா மட்டமான பேட்டிங்கை பாத்ததே இல்ல : கடுப்பான காம்பிர்!

மும்பை அணிக்கு எதிரான தோல்விக்கு மட்டமான பேட்டிங் தான் காரணம் என கொல்கத்தா கேப்டன் காம்பிர் தெரிவித்துள்ளார்.

TOI Sports 14 May 2017, 10:12 am
கொல்கத்தா: மும்பை அணிக்கு எதிரான தோல்விக்கு மட்டமான பேட்டிங் தான் காரணம் என கொல்கத்தா கேப்டன் காம்பிர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil gautam gambhir blames irresponsible batting for loss against mumbai indians
இப்படி ஒரு மகா மட்டமான பேட்டிங்கை பாத்ததே இல்ல : கடுப்பான காம்பிர்!


இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த 54வது லீக் போட்டியில், மும்பை,கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் மும்பை அணி, கொல்கத்தா அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சொந்த மண்ணில், வெற்றிக்கு அருகில் இருந்து தோல்வியை சந்தித்த கொல்கத்தா அணி, புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால், பிளே ஆப் சுற்றுகளில் முதல் இரண்டு இடங்களுக்கும் இரண்டாவது அதிர்ஷ்ட வாய்ப்பு அனாமத்தாக ஐதராபாத் அணிக்கு சென்றது.

இதுகுறித்து கொல்கத்தா அணி கேப்டன் காம்பிர் கூறுகையில்,’ கொல்கத்தா மைதானத்தில் இது எட்டக்கூடிய இலக்கு தான். ஆனால் யாராவது ஒரு பேட்ஸ்மேன் இறுதிவரை நிலைத்து நின்று விளையாடி இருக்க வேண்டும். ஆனால், இன்று பொறுப்பில்லாத ஷாட்களால் விக்கெட்டை விரைவாக இழக்க நேர்ந்தது. எப்படியும் இந்த இலக்கை 10 அல்லது 12 ஓவர்களில் எட்டிவிடுவோம் என நினைத்தேன்.’ என்றார்.

KOLKATA: Kolkata Knight Riders skipper Gautam Gambhir blamed his batsmen for their irresponsible batting after they suffered a nine-run loss against Mumbai Indians in IPL here.

அடுத்த செய்தி

டிரெண்டிங்