ஆப்நகரம்

Chris Gayle defamation case: கிறிஸ் கெய்லுக்கு கோடி கணக்கில் இழப்பீடு வழங்க ஆஸ்திரேலியா நீதிமன்றம் உத்தரவு

கெய்லுக்கு $220,770 டாலர் (ரூ. 1 கோடியே 55 லட்சம்) இழப்பீடு வழங்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 3 Dec 2018, 2:26 pm
2015 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து நாட்டில் நடைப்பெற்றது.
Samayam Tamil gayle

அப்போது போது, வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல் தங்கியிருந்த அறையில், மசாஜ் செய்யும் பெண் சென்றதாகவும், அவர் முன் கெய்ல் ஆடையின்றி தவறாக நின்றதாக, கெயல் மீது ஆஸ்திரேலியாவின் ஃபேர்ஃபாக்ஸ் (Fairfax) செய்திதாள் நிறுவனம் ஜனவரி 2016ல் செய்தியை வெளியிட்டது.

ஃபேர்ஃபாக்ஸ் செய்தியை மையமாக வைத்து அந்நாட்டின் மற்ற செய்தி நிறுவனங்களும் செய்தியை வெளியிட்டன.

இதனால் மனவேதனை அடைந்த கிறிஸ் கெய்ல், “தன்னை குறித்து தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், தன் புகழுக்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாக வெளியிட்ட செய்தி நிறுவனம் மீது நடவடிக்கையும், இழப்பீடும் வழங்க வேண்டும்.” என கெய்ல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

$220,770 டாலர் இழப்பீடு :இது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கிறிஸ் கெய்ல் மீதான வழக்கில், எந்த ஆதாரமும் இல்லை, செய்தி நிறுவனத்தால் நிரூபணமும் செய்ய முடியாததால், கெய்லுக்கு $220,770 டாலர் (ரூ. 1 கோடியே 55 லட்சம்) இழப்பீடு வழங்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல் உச்சநீதிமன்றம் நீதிபதில் லூசி மெக்கல்லம் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்