ஆப்நகரம்

11 ஆண்டுகளுக்கு முன் தொலைந்தவரை மீண்டும் கண்டுபிடித்த இங்கிலாந்து அணி!

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து வீரர் கிராத் பேட்டி அணியில் இடம் பிடித்தார்.

TOI Sports 20 Oct 2016, 7:05 pm
சிட்டகாங்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து வீரர் கிராத் பேட்டி அணியில் இடம் பிடித்தார்.
Samayam Tamil gj batty comes back to cricket after 11 years
11 ஆண்டுகளுக்கு முன் தொலைந்தவரை மீண்டும் கண்டுபிடித்த இங்கிலாந்து அணி!


வங்கதேசம் சென்றுள்ள இங்கிலாந்து அணி, 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி, சிட்டகாங்கில் நடக்கிறது. இதில் இங்கிலாந்து அணியில், கிராத் ஜான் பேட்டி, ,கடந்த 2005க்கு பின் தற்போது மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.

இதன் மூலம் சுமார் 11 ஆண்டுகள் 137 நாட்களுக்கு பின் மீண்டும் அணியில் இடம் பிடித்த பேட்டி, அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு இடைவேளைக்கு பின் மீண்டும் சர்வதேச அணியில் இடம் பிடித்த வீரர் என்ற புதிய சாதனை படைத்தார்.

அதிசய ஒற்றுமை:

தற்போது 39 வயது பூர்த்தியான பேட்டி, கடந்த 2003ல் (அக்டோபர் 21 -25) வங்கதேசம் சென்ற இங்கிலாந்து அணியில் இடம் பிடித்து டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இதன்பின் கடந்த 2005ல் இங்கிலாந்து சென்ற வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டில் கடைசியாக பங்கேற்றிருந்தார்.

இதன் பின் 11 ஆண்டுகள் 137 நாட்களுக்கு பின், சரியாக அவர் அறிமுகமான ஒருநாளைக்கு முன், தற்போது மீண்டும் சர்வதேச களத்தில் குதித்துள்ளார். இதற்கு இடையில் இவர் சுமார் 142 டெஸ்ட் போட்டிகளை மிஸ் செய்துள்ளார். இதன் மூலம் அதிக போட்டிகளை மிஸ் செய்த வீரர்கள் பட்டியலில் பேட்டி முதலிடம் பிடித்தார்.

இதற்கு முன் முன்னாள் இங்கிலாந்து வீரர் பிக்நெல் 10 ஆண்டுகள் 12 நாட்களில் சுமார் 114 போட்டிகளை மிஸ் செய்து பின் மீண்டும் களமிறங்கினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்