ஆப்நகரம்

ஓட ஓட அடித்த குணரத்னே: சொந்த மண்ணில் நொந்து போன ஆஸி.,!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், குணரத்னே வெளுத்து வாங்க இலங்கை அணி, 2 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

TOI Sports 19 Feb 2017, 5:48 pm
விக்டோரியா: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், குணரத்னே வெளுத்து வாங்க இலங்கை அணி, 2 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
Samayam Tamil gunaratne threatens stunning upset
ஓட ஓட அடித்த குணரத்னே: சொந்த மண்ணில் நொந்து போன ஆஸி.,!


ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணி, 3 சர்வதேச டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இத்தொடரில் சீனியர், முக்கிய வீரர்களை ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் விடுவித்தது. மெல்போர்னில் நடந்த முதல் டி-20 போட்டியில் இலங்கை அணி வென்றது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி விக்டோரியாவில் நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் தரங்கா, முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

ஹென்ரிக்ஸ் அசத்தல்:
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, கிளிங்கர் (43), டன்க் (32), ஹென்ரிக்ஸ் (56*) ஆகியோர் கைகொடுக்க, 20 ஓவரில் 173 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்டானது’. இலங்கை அணி சார்பில் குலசேகரா அதிகபட்சமாக 4 விக்கெட் சாய்த்தார்.

குணரத்னே விளாசல்:
கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு, டிக்வெலா (14), தரங்கா (4) சொதப்பல் துவக்கம் அளித்தனர். பின் வந்த வீரர்கள் வேகமாக பெவிலியன் திரும்ப கவுகேந்திரா (32) ஓரளவு கைகொடுத்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் விடாமல் போராடிய குனரத்னே, ஹென்ரிஸ் வீசிய போட்டியின் 19வது ஓவரில் ’ஹாட்ரிக்’ சிக்சர், ஒரு பவுண்டரி என 22 ரன்கள் விளாசினார்.

தொடர்ந்து இலங்கையின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் குலசேகரா (12) அவுட்டாக, அடுத்த பந்தை குணரத்னே பவுண்டரிக்கு அனுப்பினார். தொடர்ந்து அதிரடி காட்டிய குணரத்னே கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதையடுத்து இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ARE YOU SERIOUS?! #AUSvSL pic.twitter.com/8TxvB2u0Da — cricket.com.au (@CricketAus) February 19, 2017 இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றியது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்