ஆப்நகரம்

விரைவில் அப்பாவாகிறார் ஹர்பஜன்சிங்

அண்மையில் திருமணம் செய்து கொண்ட பிரபல ஜோடியான ஹர்பஜன்சிங் மற்றும் கீதா பஸ்ரா ஆகியோர் தங்களின் முதல் குழந்தையை எதிர்நோக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது

TNN 11 Apr 2016, 3:03 pm
அண்மையில் திருமணம் செய்து கொண்ட பிரபல ஜோடியான ஹர்பஜன்சிங் மற்றும் கீதா பஸ்ரா ஆகியோர் தங்களின் முதல் குழந்தையை எதிர்நோக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
Samayam Tamil harbhajan singh geeta basra all set to welcome their first child
விரைவில் அப்பாவாகிறார் ஹர்பஜன்சிங்


கடந்த நவம்பர் மாதத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் மற்றும் பாலிவுட் நடிகை கீதா பஸ்ராவுக்கு திருமணம் நடந்தது. அண்மையில் மும்பையில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட கீதா பஸ்ரா கருவுற்றது அவரின் ஆடை மற்றும் உடல் வாகு மூலம் வெளிப்பட்டதாக ஐபிஎல் தொடக்க விழாவில் கலந்து கொண்ட சிலர் தெரிவித்தனர்.

ஹர்பஜன்சிங் மற்றும் கீதா பஸ்ரா ஆகியோருக்கு நெருக்கமாக ஒருவர் இந்த மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் லண்டன்வாசியான கீதா பஸ்ரா தன் குடும்பத்துடன் நேரம் கழிக்க கீதா லண்டன் செல்கிறார்.

Good news on its way! Harbhajan's wife Geeta Basra is pregnant pic.twitter.com/q7QT4FwRoE— TOI Entertainment (@TOIEntertain) April 11, 2016

அடுத்த செய்தி

டிரெண்டிங்