ஆப்நகரம்

ஆல்-டைம் பெஸ்ட் XI இதுதான்…ஆஸி வீரருக்கு கேப்டன் பதவி: முரளிதரனுக்கு 12ஆவது இடம்: ஹர்பஜன் கணிப்பு!

ஆல்-டைம் பெஸ்ட் டெஸ்ட் XI அணியை ஹர்பஜன் சிங் கணித்து வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 2 Dec 2021, 5:16 pm
சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு அதிக ரன்கள், அதிக விக்கெட்களை குவித்த வீரர்களை வைத்து, பல முன்னாள் வீரர் அவ்வப்போது ஆல்-டைம் XI அணியை கணித்து கூறுவது வழக்கம்.
Samayam Tamil ஹர்பஜன் சிங்


ஓபனர்கள்:

அந்த வகையில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் தனது ஆல்-டைம் பெஸ்ட் டெஸ்ட் XI அணியை கணித்து வெளியிட்டுள்ளார். அதில், ஓபனர்களுக்கான இடத்தை டெஸ்ட் ஜாம்பவான் அலெஸ்டர் குக், இந்தியாவிற்காக இரண்டு முறை முச்சதம் அடித்த விரேந்தர் சேவாக் ஆகியோருக்கு வழங்கியுள்ளார்.

சேவாக்கை தேர்வு செய்தது குறித்துப் பேசிய ஹர்பஜன் சிங், “டெஸ்ட் கிரிக்கெட்டில் காலம் காலமாக பின்பற்றி வந்த ஆட்ட முறையை மாற்றி, முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாட முடியும் என்பதை நிரூபித்தவர் சேவாக். இவர் மாடர்ன் டே விவியன் ரிச்சர்ட்ஸ்” என புகழ்ந்து பேசினார்.

கேப்டன்:

ஒன்டவுன் வீரருக்கான இடத்தை டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் 400 ரன்கள் அடித்த ஒரேயொரு வீரரான பிரையன் லாராவுக்கு வழங்கியுள்ளார். அடுத்து 4ஆவது இடம், டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த முதல் வீரராக இருக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 5ஆவது இடத்தை ஆஸ்திரேலியிவின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த ஸ்டீவ் வாகிற்கு வழங்கி, இந்த ஆல்டைம் XI அணிக்கு அவரையே கேப்டனாக நியமித்துள்ளார்.

முரளிதரனுக்கு நோ:

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்கக்கராவை தேர்வு செய்துள்ளார். வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக தென்னாப்பிக்க முன்னாள் வீரர் ஜாக் காலிஸ், ஸ்பின்னராக ஜாம்பவான் ரிஸ்ட் ஸ்பின்னர் ஷேன் வார்ன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களுக்கான இடங்களில் வாசிம் அக்ரம், கிளென் மெக்ரா, ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரின் பெயர்கள் இருக்கிறது.

டெஸ்டில் 800 விக்கெட்களை கைப்பற்றி, வரலாற்று சாதனை படைத்துள்ள இலங்கை அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு 12ஆவது இடம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

ஹர்பஜன் சிங்கின் ஆல்டைம் பெஸ்ட் XI: அலெஸ்டர் குக், விரேந்தர் சேவாக், பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர், ஸ்வீவ் வாக் (கேப்டன்), ஜாக் காலிஸ், குமார் சங்கக்கரா (விக்கெட் கீப்பர்), ஷேன் வார்ன், வாசிம் அக்ரம், கிளென் மெக்ரா, ஜேம்ஸ் ஆண்டர்சன்.

12ஆவது வீரர்: முத்தையா முரளிதரன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்