ஆப்நகரம்

அஸ்வினுக்கு இது கஷ்டகாலமா? - கங்குலி, ஹர்பஜன் பேச்சால் குழப்பம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இனி தொடர்ந்து அஸ்வினுக்கு இடம் கிடைப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது என கங்குலி, ஹர்பஜன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

TOI Sports 22 Aug 2017, 10:15 pm
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இனி தொடர்ந்து அஸ்வினுக்கு இடம் கிடைப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது என கங்குலி, ஹர்பஜன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Samayam Tamil harbhajan singh sourav ganguly raise questions over ravichandran ashwins odi future
அஸ்வினுக்கு இது கஷ்டகாலமா? - கங்குலி, ஹர்பஜன் பேச்சால் குழப்பம்


இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர்களில் முன்னனியில் உள்ளவர் அஸ்வின். இவர் இந்தியா மற்றும், ஆசிய கண்டத்தில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அசத்தி வருகிறார். அதே சமயம் அவருக்கு ஒருநாள் போட்டிகளில் இனி இடம் கிடைக்குமா என கங்குலி, ஹர்பஜன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஹர்பஜன் கேள்வி :
இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும் ஒருநாள் போட்டியில் சேர்க்கப்படாமல் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதா? அல்லது அவர் நீக்கப்பட்டுள்ளாரா? என சரியாக தெரியவில்லை. அதே சமயம் மற்றொரு புறம் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட தயாராகி வருகிறார். இது எந்த வகையான ஓய்வு என தெரியவில்லை. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் அவர் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து நீடிப்பது கஷ்டமே என ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

கங்குலி கருத்து :
ஹர்பஜனின் கூற்று சரியானது தான். அவர் என்ன நோக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பது எனக்கு நன்றாகவே தெரிகிறது. ஏனெனில் ஹர்பஜனுக்கும், எனக்கும் இதே நிலை தான் நடந்தது.

இங்கிலாந்தில் நடைப்பெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை கருத்தில் கொண்டு தான், அடுத்து நடைப்பெறும் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள சுழ்ற்பந்து வீச்சுக்கு ஏற்ற மைதானத்தில் குல்தீப் யாதவை முன்னிலை படுத்தும் வேலை மெதுவாக நடப்பதாக தெரிகிறது. அடுத்து எளிதாக குல்தீப் சிறப்பாக செயல்படுகிறார் என கூறி அஸ்வினை கலற்றிவிடும் வேலை நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்