ஆப்நகரம்

தென் ஆப்பிரிக்கா அணியிடம் சிங்கிளாக சீறிப்பாயும் பாண்டியா!

தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு வருகிறார்

Samayam Tamil 6 Jan 2018, 7:10 pm
தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு வருகிறார்.
Samayam Tamil hardik pandya comes to rescue india from scoring low score against south africa
தென் ஆப்பிரிக்கா அணியிடம் சிங்கிளாக சீறிப்பாயும் பாண்டியா!


தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி 3 டெஸ்ட் போட்டி, 6 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுனில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் பேப் டு பிளஸ்சி பேட்டிங் தேர்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து பேட்டிங்கைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் பேப் டு பிளிசிஸ் மற்றும் டிவில்லியர்ஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டு பிளிசிஸ் 62 ரன்களிலும், டிவில்லியர்ஸ் 65 ரன்களிலும் அவுட்டாகினர். மற்ற வீரர்கள் எதுவும் பெரிதாக சோபிக்காததால் தென்னாப்பிரிக்கா அணி 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல்அவுட்டானது.

இதையடுத்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்களை தொடர்ச்சியாக இழந்தது. 92 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார்.

இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின்போது, இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை குவித்துள்ளது. ஹர்திக் பாண்டியா 82 ரன்களுடனும், புவனேஸ்குமார் 24 ரன்களுடனும் தற்போது களத்தில் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்