ஆப்நகரம்

IND Vs.PAK:ஆட்டத்தின் நடுவே சுருண்டு விழுந்த பாண்டியா, சோகத்தில் இந்திய வீரர்கள்!!

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, பாகிஸ்தான் உடனான போட்டியில், சுருண்டு விழுந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Samayam Tamil 19 Sep 2018, 7:05 pm
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, பாகிஸ்தான் உடனான போட்டியில், சுருண்டு விழுந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Samayam Tamil ஆட்டத்தின் நடுவே சுருண்டு விழுந்த பாண்டியா, சோகத்தில் இந்திய வீரர்கள்!!
ஆட்டத்தின் நடுவே சுருண்டு விழுந்த பாண்டியா, சோகத்தில் இந்திய வீரர்கள்!!


ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளன.

இதில், இன்றைய போட்டியில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் விளையாடி வருகிறது. சுமார் ஓராண்டுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவதால், ரசிகர்கள் மத்தியில் போட்டிக் குறித்த எதிர்ப்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

இதில், டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல் ஹக் மற்றும் பக்கர் சமான் இருவரும் முறையே 2 மற்றும் 0 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வந்த பாபர் அசாம் மற்றும் சோயிப் மாலிக் இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இந்நிலையில், 17வது ஓவரை வீசிய இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, அந்த ஓவரின் 5வது பந்தை வீசும்போது, முதுகு வலியால் சுருண்டு மைதானத்தின் நடுவே விழுந்தார். இதைப் பார்த்த இந்திய வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதன்பின், அங்கு ஸ்டெரச்சர் கொண்டுவரப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டார். அவர் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்படும்போது இருந்த நிலை, இந்திய ரசிகர்களை சிறிது கலக்கத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்