ஆப்நகரம்

இந்தியா டி20 தொடரை வெல்வது வருண பகவானால் தான் முடியும்!

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 போட்டி தொடரை இந்தியா கைப்பற்ற வேண்டுமானால் அது வருண பகவான் கையில் தான் உள்ளது.

Samayam Tamil 21 Feb 2018, 6:44 pm
செஞ்சுரியன் : தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 போட்டி தொடரை இந்தியா கைப்பற்ற வேண்டுமானால் அது வருண பகவான் கையில் தான் உள்ளது.
Samayam Tamil heres the weather forecast for 2nd south africa vs india t20 in centurion
இந்தியா டி20 தொடரை வெல்வது வருண பகவானால் தான் முடியும்!


தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தாலும், ஒருநாள் போட்டியில் 5-1 என வென்று வரலாற்று சாதனைப் படைத்தது. இதைத் தொடர்ந்து நடைப் பெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று 2வது டி20 கிரிக்கெட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைப்பெற உள்ளது.

இடியுடன் மழை:
முன்னதாக 4 ஒருநாள் போட்டியின் போது அதிகமாக இடி, மின்னல் அடித்ததால் போட்டி பாதிக்கப்பட்டது. அந்த போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இன்று நடைப்பெறும் டி20 போட்டி மழையால் 90% பாதிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்படி இருக்க, அந்த மைதானத்தில் நடந்து வரும் இந்தியா - தென் ஆப்ரிக்கா பெண்கள் டி20 போட்டியின் போது மழை காரணமாக சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது மைதானத்தை சுற்றி கருமையான மேகங்கள் சூழ்ந்துள்ளதால் மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்