ஆப்நகரம்

ரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்தது விதர்பா அணி

இந்தியாவின் மிகப்பெரிய உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது விதர்பா அணி.

TOI Sports 1 Jan 2018, 7:27 pm
இந்தூர் : இந்தியாவின் மிகப்பெரிய உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது விதர்பா அணி.
Samayam Tamil history made vidarbha seal maiden ranji title
ரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்தது விதர்பா அணி


91 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரான ரஞ்சி கோப்பை தொடர் அக்டோபர் மாதம் 6ம் தேதி முதல் தொடங்கி நடைப்பெற்றது.

இதன் இறுதிப்போட்டியில் டெல்லி மற்றும் விதர்பா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி முதல் இன்னிங்ஸில் 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தொடர்ந்து விளையாடிய விதர்பா முதல் இன்னிங்ஸில் 547 ரன்களை குவித்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் டெல்லி அணி 280 ரன்களை எடுத்து, 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விதர்பா அணிக்கு நிர்ணயித்தது.

விதர்பா அணி 4வது நாளிலேயே ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களை விளாசி முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்று அசத்தியது.

விதர்பா அணி சார்பாக முதல் இன்னிங்ஸில் 6, 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட் வீழ்த்திய ராஜேஷ் குர்பானி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்