ஆப்நகரம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இடம்பிடித்தார் இந்திய வம்சாவளி இந்திரா நூயி!!

துபாயில் நடைபெற்ற ஐசிசி தலைவர்கள் சந்திப்பில், பெப்சி நிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி ஐசிசியின் முதல் பெண் இண்டிபெண்டன்ட் டைரக்டராக (Independent Director) தேர்வு செய்யப்பட்டுள்ளார்

Samayam Tamil 9 Feb 2018, 3:48 pm
துபாய்: துபாயில் நடைபெற்ற ஐசிசி தலைவர்கள் சந்திப்பில், பெப்சி நிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி ஐசிசியின் முதல் பெண் இண்டிபெண்டன்ட் டைரக்டராக (Independent Director) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil icc appoints indra nooyi as its first independent female director
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இடம்பிடித்தார் இந்திய வம்சாவளி இந்திரா நூயி!!


ஐசிசி என்றழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர்கள் சந்திப்பு துபாயில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இந்திய வம்சாவளியான இந்திரா நூயியை முதல் பெண் இண்டிபெண்டன்ட் டைரக்டராக தேர்வு செய்துள்ளனர். இந்த அறிவிப்பை ஐசிசியின் தலைவர் சஷான்க் மனோகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு பற்றி தெரிவித்துள்ள இந்திரா நூயி,”ஐசிசி உடன் இணைவது உற்சாகமாக உள்ளது. கிரிக்கெட் விளையாட்டை வளர்ச்சியடைய செய்வதற்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டை ரசிக்க புது அர்த்தம் உண்டாக்குவதற்கும் ஐசிசியில் இருக்கும் நண்பர்கள், பங்குதாரர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்திரா நூயி வரும் ஜூன் 2018 இலிருந்து இரண்டு ஆண்டுகள் இந்தப் பதவியில் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவிக்காலம் முடிந்த பின் ஐசிசி அந்தப் பதவிக்காலத்தை வேண்டுமென்றால் நீட்டித்துக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

பெப்சி நிறுவனத்தின் தலைவராக இருக்கும் இந்திரா நூயி, உலக அளவில் முன்னணி தொழிலதிபாராக திகழ்ந்து வருகிறார். இதனால், கிரிக்கெட் விளையாட்டை உலக அளவில் பிரபலமடைய செய்ய ஐசிசி இந்திரா நூயிக்குப் இந்தப் பதவியை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்