ஆப்நகரம்

சொதப்பிய வெ.இ - கெத்து காட்டிய ஆப்கானிஸ்தான் உலக கோப்பை தகுதி கோப்பையை வென்று சாதனை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த உலக கோப்பை தகுதி போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாதித்துள்ளது.

Samayam Tamil 25 Mar 2018, 8:27 pm
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த உலக கோப்பை தகுதி போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாதித்துள்ளது.
Samayam Tamil icc


2019ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெற உள்ளன. இந்த தொடர் மே 30 முதல் ஜூலை 14ம் தேதி வரை நடைப்பெற உள்ளது.
இந்த தொடரில் பங்கேற்பதற்காக தகுதிப் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்றது.
இந்த தொடரின் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.
டாஸ் வென்ற வெ.இ முதலில் பேட்டிங் செய்தது.

ஆப்கானிஸ்தானின் 16 வயது முஜீப் உர் ரகுமானின் அபார சுழலில் வெ.இ 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
வெ.இ அதிகபட்சமாக பவல் 44, ஹெட்மெர் 38 ரன்கள் எடுத்தனர். மேலும் 46.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 204 ரன்கள் எடுத்தது.

மேலும் படிக்க : கிரிக்கெட் உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகள் பட்டியல் தயார்

ஆப்கானிஸ்தான் வெற்றி:
204 ரன் இலக்கை விரட்டிய ஆப்கானுக்கு தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான முகமத் ஷெஜத் 84 ரன்களும், ரஹ்மத் ஷா 51 ரன் விளாசி வெற்றிக்கு உதவினர்.



ஆப்கான் அணி 40.4 ஓவரில் 206 ரன்கள் எடுத்து உலக கோப்பை தகுதி போட்டிக்கான கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இரண்டு முறை உலக கோப்பை வென்ற வெ.இ அணிக்கு ஆப்கன் தற்போது பாடம்புகட்டியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்