ஆப்நகரம்

இரண்டு ஆண்டுகள் தள்ளிபோகும் டி-20 உலகக்கோப்பை!

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் துவங்க இருந்த டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Samayam Tamil 31 Mar 2020, 2:26 pm
சீனாவில் கிளம்பிய கொரோனா வைரஸ் உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டு ஒத்தி வைக்கப்பட்டது.
Samayam Tamil டி-20 உலகக்கோப்பை


இரண்டு ஆண்டுகள்
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி துவங்குவதாக இருந்த 7ஆவது டி-20 கிரிக்கெட் தொடரும் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் 6 மாதம் எல்லைகளை மூடியுள்ளது. இந்நிலையில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு முடியாது
இதற்கு அடுத்த ஆண்டு இத்தொடரை நடத்த முடியாததே இரண்டு ஆண்டு ஒத்திவைக்கப்பட காரணம் என தெரிகிறது. இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், “தற்போதைய நிலையில் முதல் கேள்வியே உலகக்கோப்பை தொடரை ஒத்திவைப்பதாகவே உள்ளது. ஆனால் எப்போது என தெரியாது. ஆனால் டிசம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.

ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் தள்ளிப்போகும் ஐபிஎல் தொடர்!

வாய்ப்பு இல்லை
அடுத்த ஆண்டு துவக்கத்தில் பிக் பாஷ் தொடர் நடக்கும். தொடர்ந்து மார்ச் மாதம் ஐபிஎல் தொடர் நடக்கும். இதற்கிடையில் அடுத்ததடுத்து டி-20 தொடர்களை நடத்த ஒளிபரப்பாளர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏன் என்றால் ஏற்கனவே இந்தியா அடுத்த ஆண்டில் டி-20 உலகக்கோப்பை தொடரை நடத்தவுள்ளது. அதனால் 2022 தான் இயல்பான தேர்வாக இருக்கும்” என்றார்.

ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாக முழுமையாக துணை நிற்பேன்: டிம் பெய்ன்!

ஐசிசி அறிக்கை
முன்னதாக டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் திட்டமிட்டது போல நடத்தப்படும் என ஐசிசி திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்டிருந்த அறிக்கையில், “தற்போது கொரோனா வைரஸ் சிக்கல் செல்லும் சூழலில் , ஐசிசி டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்துவது குறித்து உள்ளூர் கமிட்டி ஆய்வு செய்து வருகிறது. தொடர்ந்து கண்காணித்து திட்டமிட்டது போல செயல்படும்” என அதில் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்