ஆப்நகரம்

டெஸ்ட் ரேங்கிங் : ராகுல், தவான் முன்னேற்றம், ரவிந்திர ஜடேஜா சறுக்கல்!

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி வீரர்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். ரவிந்திர ஜடேஜா, ஆல் ரவுண்டர்கள் வரிசையில் தனது நம்பர்-1 இடத்தை இழந்தார்.

TOI Sports 15 Aug 2017, 4:32 pm
துபாய்: சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி வீரர்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். ரவிந்திர ஜடேஜா, ஆல் ரவுண்டர்கள் வரிசையில் தனது நம்பர்-1 இடத்தை இழந்தார்.
Samayam Tamil icc test rankings india openers shikhar dhawan and kl rahul achieve career best spots
டெஸ்ட் ரேங்கிங் : ராகுல், தவான் முன்னேற்றம், ரவிந்திர ஜடேஜா சறுக்கல்!


இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், சர்வதேச டெஸ்ட் அரங்கில் இந்திய அணி (123 புள்ளிகள்) தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.

தவிர வீரர்களுக்காக தரவரிசைப்பட்டியலில் இந்திய வீரர்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். குறிப்பாக தொடர் நாயகன் விருது வென்ற தவான் (28 வது இடம்), ராகுல் (9வது இடம்) இருவரும் தங்களது வாழ்நாளில் சிறந்த இடங்களுக்கு முன்னேறினர்.

இவர்களை தவிர, புஜாரா (4வது இடம்), விராட் கோலி (5வது இடம்), ரகானே (10வது இடம்) ஆகியோர் டாப்-10ல் இடம் பெற்றனர்.

பவுலர்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர்.

சிறந்த ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில், வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன், முதலிடத்துக்கு முன்னேறினார். ரவிந்திர ஜடேஜா இரண்டாவது இடத்திலும், அஷ்வின் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

Scintillating performances in the recently-concluded three-match Test series against Sri Lank have helped India openers, Shikhar Dhawan and Lokesh Rahul to attain career-best rankings in the latest ICC Test Rankings, released on Tuesday (August 15).

அடுத்த செய்தி

டிரெண்டிங்