ஆப்நகரம்

IND vs AUS Test: ‘ஆஸியை வீழ்த்தணும்னா’…இந்த 2 வீரர்களை இந்தியா சமாளிக்கணும்: இயான் சேப்பல் கருத்து!

டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும் என்றால், இந்திய அணி இதனை செய்ய வேண்டும் என இயான் சேப்பல் பேசியுள்ளார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 31 Jan 2023, 7:00 am
இன்னும் 2 வாரங்களில் இந்தியா, ஆஸ்திரேலியா பங்கேற்கும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் துவங்கி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 9-13, 17-21 மற்றும் மார்ச் 1-5, 9-13 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
Samayam Tamil இயான் சேப்பல்


இதற்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 18 பேர் இடம்பிடித்துள்ளனர். கேப்டனாக வழக்கம்போல் பாட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ளார். காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் மிட்செல் ஸ்டார்க்கிற்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இவர் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி:

இந்நிலையில் தற்போது, இந்த 4 டெஸ்ட் போட்டிகளில், முதல் இரண்டு டெஸ்ட்களில் இடம்பிடிக்கும் இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் இருவரும் அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.

‘இந்தியாவுக்கு எதிரான’…4 டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!!!எப்பா சாமி..எல்லாரும் அதிரடி வீரர்கள்!

இந்திய டெஸ்ட் அணி (முதல் 2 போட்டிகள்): ரோஹித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணைக் கேப்டன்), ஷுப்மன் கில், சேத்தேஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கேஎஸ் பரத், இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனாத்கட், சூர்யகுமார் யாதவ்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்:

இத்தொடரில் இந்திய அணி 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வென்றாக வேண்டும். கடந்த இரண்டுமுறை ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதால், இம்முறை இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி கடுமையாக போராடும் எனக் கருதப்படுகிறது.

இயான் சேப்பல் கருத்து:

இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு சவாலாக இருக்க கூடிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இயான் சேப்பல் பேசியுள்ளார். அதில், ‘‘ரோஹித், கோலி, புஜாரா ஆகியோருக்கு டாஸ்க் என்னவென்றால், இவர்கள் நாதன் லயனுக்கு எதிராக நல்ல மனவலிமையோடு விளையாட வேண்டும். அவர் மீது ஆதிக்கம் செலுத்தி விளையாடியாக வேண்டும்” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், ‘‘அதேபோல் ஸ்டீவன் ஸ்மித்தை கட்டுப்படுத்த இந்திய அணி யுக்திகளை உருவாக்க வேண்டும். அவர் தற்போது செம்ம பார்மில் இருக்கிறார். இவரை நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவிட்டால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோகலாம். இந்த இரண்டு வீர்களை இந்திய அணி சமாளித்தால் மட்டும்தான், இந்திய அணி வெற்றியைப் பெற முடியும்” எனத் தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்