ஆப்நகரம்

சும்மா அதிருதில்ல...சிவாஜி ‘ஸ்டைலில்’ திருப்பிக் கொடுத்த கோலி!

’எங்ககிட்ட ஒன்னு கொடுத்தா அதை திருப்பிக்கொடுக்கும் கேரக்டர் நாங்க’ என ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சிவாஜி ரஜினி ஸ்டைலில் இந்திய கேப்டன் கோலி தெரிவித்தார்.

TOI Sports 28 Mar 2017, 5:49 pm
தரம்சாலா: ’எங்ககிட்ட ஒன்னு கொடுத்தா அதை திருப்பிக்கொடுக்கும் கேரக்டர் நாங்க’ என ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சிவாஜி ரஜினி ஸ்டைலில் இந்திய கேப்டன் கோலி தெரிவித்தார்.
Samayam Tamil if something pokes us we give it right back virat kohli
சும்மா அதிருதில்ல...சிவாஜி ‘ஸ்டைலில்’ திருப்பிக் கொடுத்த கோலி!


இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று டெஸ்டின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் ’டிரா’வில் முடிந்தது.

இரு அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டி, ஃபைனல் போட்டியாக அனல் பறக்க தரம்சாலாவில் நடந்தது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இத்தொடர் துவங்கும் முன் ஆஸ்திரேலிய வீரர்கள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உட்பட அனைவரும் இந்திய கேப்டன் கோலியை குறிவைத்து அவ்வளவு வாய் பேசினார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது கோலி சவுக்கால் அடித்த மாதிரி பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து கேப்டன் கோலி கூறுகையில்,’ எங்ககிட்ட ஒன்னு கொடுத்தா அதை திருப்பிக்கொடுக்கும் கேரக்டர் நாங்க. பேச்சுக்கு மரியாதை கொடுத்தா, மதிக்கும் பக்குவம் எங்களுக்கு உள்ளது. அதேநேரத்தில் எங்களை மதிக்காமல் திமிராக இருந்தால் அதற்கான பலனை நிச்சயம் எதிரணி வீரர்கள் அனுபவித்தே தீர வேண்டும். இந்த உள்ளூர் தொடரை ஒவ்வொரு இந்தியராலும் கண்டிப்பாக மறக்கவே முடியாது,’ என்றார்.

DHARAMSALA: Indian captain Virat Kohli on Tuesday described the 2-1 triumph over Australia as his side's best series win so far, saying his highly motivated teammates give it right back when poked.

அடுத்த செய்தி

டிரெண்டிங்