ஆப்நகரம்

சேவக்கை ஓரம் கட்டிய கோலி !

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டில், 150 ரன்களை கடந்த இந்திய கேப்டன் கோலி, முன்னாள் வீரர் சேவக்கின் சாதனையை தகர்த்தார்.

TOI Sports 10 Feb 2017, 10:29 am
ஹைதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டில், 150 ரன்களை கடந்த இந்திய கேப்டன் கோலி, முன்னாள் வீரர் சேவக்கின் சாதனையை தகர்த்தார்.
Samayam Tamil 3
சேவக்கை ஓரம் கட்டிய கோலி !


இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. இந்த டெஸ்ட் ஹைதராபாத்தில் நடக்கிறது.
இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர் முரளி விஜய், கேப்டன் கோலி ஆகியோர் சதம் அடித்து கைகொடுக்க இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் களமிறங்கிய ரகானே முதலில் அரைசதம் கடந்தார். எதிர் முனையில் கோலி, 150 ரன்களை கடந்தார். இதன் மூலம் சொந்தமண்ணில் நடந்த டெஸ்டில் ஒரே சீசனில் அதிக ரன் எடுத்த வீரர்கள் வரிசையில் முன்னாள் வீரர் சேவக்கை (2004-05ல் 1105 ரன், 17 இன்னிங்ஸ்) பின்னுக்கு தள்ளி இந்திய கேப்டன் கோலி, முதலிடத்தில் பிடித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்