ஆப்நகரம்

டி-20: முகமது சிராஜ் அறிமுகம் : நியூசிலாந்து அணி ‘பேட்டிங்’!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் சிராஜ் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார். ’டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

TOI Sports 4 Nov 2017, 6:42 pm
ராஜ்கோட்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் சிராஜ் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார். ’டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
Samayam Tamil ind v nz 2017nz include phillips and bat siraj debuts for india
டி-20: முகமது சிராஜ் அறிமுகம் : நியூசிலாந்து அணி ‘பேட்டிங்’!


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி, 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, இன்று ராஜ்கோட்டில் நடக்கிறது.

சிராஜ் வாய்ப்பு:
இதில் ’டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதில் இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய ஆட்டோ ஓட்டுனர் மகன் சிராஜ் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார்.

இதே போல நியூசிலாந்து அணியில் சவுத்திக்கு பதிலாக மில்னேவும், லதாமுக்கு பதிலாக கிளன் பிலிப்சும் வாய்ப்பு பெற்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்