ஆப்நகரம்

இவிங்கள வச்சு தென் ஆப்ரிக்க தொடருக்கு நல்லா பழகிக்கலாம்: புஜாரா!

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான நல்ல பயிற்சியாக அமையும் என இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.

TOI Sports 10 Nov 2017, 2:59 pm
புதுடெல்லி: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான நல்ல பயிற்சியாக அமையும் என இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ind v sl 2017 cheteshwar pujara finds sl series better practice for south africa tour
இவிங்கள வச்சு தென் ஆப்ரிக்க தொடருக்கு நல்லா பழகிக்கலாம்: புஜாரா!


இந்தியா வரும் இலங்கை கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடர் வரும் நவம்பர் 16ல் கொல்கத்தாவில் துவங்குகிறது. டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் அணியை சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி..,) அறிவித்தது.

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், அந்நிய மண்ணில் நடக்கும் தென் ஆப்ரிக்க தொடருக்கு ஒரு நல்ல பயிற்சியாக அமையும் என இந்திய கிரிக்கெட் அணியின் புஜாரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புஜாரா கூறுகையில்,’ இந்திய அணி நீண்ட இடைவேளைக்கு பின் அந்நிய மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. அதற்கு முன்னதாக இலங்கை அணி இந்தியா வருவது மிகச்சிறந்த விஷயம். இத்தொடர் தென் ஆப்ரிக்க தொடருக்கு ஒரு சிறந்த பயிற்சியாக அமையும். இந்த வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்துவதே எனது இலக்கு.’ என்றார்.

"Obviously, next year's South Africa series is something that is there at the back of my mind. The upcoming Sri Lanka series will be a good opportunity to prepare for the South Africa assignment. I am confident of doing well," Pujara told PTI.

அடுத்த செய்தி

டிரெண்டிங்