ஆப்நகரம்

ஓ....என்னை எல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?: ஹர்பஜன்!

‘ஈடன் கார்டனில் தனது ஹாட்ரிக் நினைவை ஞாபகப் படுத்தியதற்கு’ இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.

TOI Sports 22 Sep 2017, 4:18 pm
புதுடெல்லி: ‘ஈடன் கார்டனில் தனது ஹாட்ரிக் நினைவை ஞாபகப் படுத்தியதற்கு’ இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ind vs aus 2017 harbhajan singh thanks eden gardens for the memories
ஓ....என்னை எல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?: ஹர்பஜன்!


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி, சென்னையில் நடந்தது. இதில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, கொல்கத்தாவில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, நம்பர்-1 இடத்துக்கு முன்னேறியது.

இதில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப், ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி மிரட்டினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய ஐந்தாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார்.

தவிர, கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில், ஜாம்பவான் கபில் தேவ் (1991, ஒருநாள்), ஹர்பஜன் சிங் (2001, டெஸ்ட்) ஆகியோருக்கு பின் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய மூன்றாவது வீரரானார் குல்தீப்.

THANK YOU EDEN GARDEN ❤️❤️❤️❤️ @BCCI pic.twitter.com/Qs1cbFklp4 — Harbhajan Turbanator (@harbhajan_singh) September 21, 2017 இதுகுறித்து ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,’ எனது ஹாட்ரிக் விக்கெட்டை நினைவு வைத்திருப்பதற்கு நன்றி.’ என குறிப்பிட்டுள்ளார்.

Eden Gardens has produced some of the most memorable moments in Indian cricket. Playing in front of a jam-packed Eden Gardens is something cricketers all over the world dream. Eden has given India some great players along with great memories. Harbhajan Singh’s Hat-trick in the 2001 series against Australia made him a household name. His hat-trick gave India its biggest victory over the Aussies in cricket.

அடுத்த செய்தி

டிரெண்டிங்