ஆப்நகரம்

IND vs AUS 4th Test: '4ஆவது நாள் ஆட்டத்தில்'...இப்படிதான் செயல்பட உள்ளோம்: வெற்றி எங்களுக்குத்தான்...ஷுப்மன் கில் நம்பிக்கை!

நான்காவது நாள் ஆட்டத்தில் இப்படித்தான் விளையாடுவோம் என ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 12 Mar 2023, 8:05 am
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது அகமதாபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
Samayam Tamil ஷுப்மன் கில்


இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கி சிறப்பாக பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஓபனர் டிராவிஸ் ஹெட் 32 (44), ஸ்டீவ் ஸ்மித் 38 (135) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்கள். இதனைத் தொடர்ந்து உஸ்மான் கவாஜா 180 (422), கேமரூன் கிரீன் 114 (170) ஆகியோர் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்து அசத்தினார்கள். தொடர்ந்து, கடைசிக் கட்டத்தில் நாதன் லைன் 34 (96), டோட் மர்பி 41 (61) ஆகியோர் எதிர்பார்க்காத நேரத்தில் ரன்களை குவித்ததால், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480/10 ரன்களை சேர்த்தது.

இந்திய இன்னிங்ஸ்:

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா 35 (58), ஷுப்மன் கில் 128 (235), புஜாரா 59 (128) ஆகியோர் சிறப்பாக விளையாடி, ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். தொடர்ந்து விராட் கோலி சிறப்பாக விளையாடி 14 மாதங்களுக்குப் பிறகு அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

தற்போது கோலி 59 (128), ரவீந்திர ஜடேஜா 16 (54) ஆகியோர் தற்போது களத்தில் இருக்கிறார்கள். இந்தியா 289/3 ரன்களை சேர்த்து, 191 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெறும். இன்று இந்தியா அதிரடியாக விளையாடி, 250 ரன்களாவது முன்னிலை பெற்றால்தான், நாளை ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய வைத்து, வெற்றிபெற போராட முடியும். இதனால், இந்த 4ஆவது நாள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திட்டம் என்ன? கில் பேட்டி:

இந்நிலையில், இந்த 4ஆவது நாளில் எப்படி செயல்படப் போகிறோம் என்பது குறித்து ஷுப்மன் கில் பேசியுள்ளார். அதில், ''தற்போது 3 விக்கெட்களை இழந்து 300 ரன்களை நாங்கள் நெருங்கியுள்ளோம். நான்காவது நாள் ஆட்டத்தில் ஸ்கோர் போர்டில் அதிகபட்ச ரன்களை குவிக்க விரும்புகிறோம். அப்படி பெரிய முன்னிலை பெற்றுவிட்டால், 5ஆவது நாளில் பிட்ச் பௌலர்களுக்கு உதவ வாய்ப்புள்ளது என்பதாலும், எங்களுக்கு வெற்றிபெற்று அதிகமாகத்தான் இருக்கிறது'' எனக் கூறினார்.

இன்று இந்திய அணி 250 ரன்களாவது முன்னிலை பெற்றால் மட்டும்தான், நாளை ஆஸ்திரேலிய அணிக்கு ஓரளவுக்காகவது நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்