ஆப்நகரம்

‘திமிரா இருக்காதீங்க’…கேப்டன் சொன்னா கேக்கணும்: கோலி, வீரர்கள் இருந்த அணி மீட்டிங்கில் ரோஹித் காட்டம்?

கேப்டன் சொன்னால் அதனை கேட்டுத்தான் ஆக வேண்டும் என ரோஹித் ஷர்மா காட்டமாக பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 5 Dec 2022, 6:55 am
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
Samayam Tamil இந்திய அணி


டாக்காவில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய இன்னிங்ஸ்:

பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததால், பேட்டர்கள் துவக்கம் முதலே ரன்களை குவிக்க திணறினார்கள். ஓபனர் ஷிகர் தவன் 7 (17) ரன்களை மட்டுமே சேர்த்தார். அடுத்து விராட் கோலி 9 (15), ரோஹித் ஷர்மா 27 (31), ஷ்ரேயஸ் ஐயர் 24 (39) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்கள்.

இதனைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் 70 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 73 ரன்களை சேர்த்து ஸ்கோரை உயர்த்தினார். அடுத்து, வாஷிங்டன் சுந்தரும் 19 (43) ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், இந்திய அணி 41.2 ஓவர்களில் 186/10 ரன்களை எடுத்தது.

வங்கதேச இன்னிங்ஸ்:

இலக்கை துரத்திக் களமிறங்கிய வங்கதேச அணியில், டாப் ஆர்டரில் ஓபனர் லிடன் தாஸ் 41 (63) மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்தார். மற்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் நடையைக் கட்டி வந்தனர். இதனால், வங்கதேச அணி 38.5 ஓவர்களில் 135/9 என படுமோசமாக திணறியது.

அந்த சமயத்தில், 10ஆவது விக்கெட்டிற்கு மெஹிடி ஹாசன், முஷ்தபிசுர் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வங்கதேச அணி வெற்றிபெற 51 ரன்கள் தேவைப்பட்டதால், இந்தியா பக்கம்தான் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அந்த சமயத்தில் மெஹடி ஹாசன் தொடர்ந்து அபாரமாக விளையாடியதால், வங்கதேச அணி இறுதியில் 46 ஓவர்களில் 187/9 ரன்களை சேர்த்து வரலாற்று வெற்றியைப் பெற்றது.

மெஹடி ஹாசன் 38 (39), முஷ்தபிசுர் 10 (11) இருவரும் கடைசிவரை களத்தில் இருந்தார்கள்.

ரோஹித் அதிருப்தி:

இப்போட்டி முடிந்தப் பிறகு, எதனால் இந்த தோல்வி என்பது குறித்து ஆராய வீரர்கள், பயிற்சியாளர்கள் இடம்பெற்ற அணி மீட்டிங், டாக்கா மைதான அறையிலேயே நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது பேசிய கேப்டன் ரோஹித், ‘‘இந்த பிட்சில், பந்துகள் குத்திய வேகத்தில் பேட்டிற்கு சரியான வேகத்தில் வராது என முன்பே அனைவரிடமும் கூறியிருந்தேன். ராகுலை தவிர எந்த பேட்டரும் இதனை பொருட்படுத்தவே இல்லை என்பது நீங்கள் விளையாடிய விதத்தில் இருந்தே தெரிந்தது”

‘‘நாம் சிறந்த பேட்டர்களாக இருக்கலாம். ஆனால், பிட்சை மதிக்காமல், பிட்ச் கண்டிஷன் தெரியாமல் விளையாடினால், விளைவுகள் இப்படித்தான் இருக்கும். இந்த தவறை இனி வரும் போட்டிகளில் செய்ய கூடாது. இதனை மனதில் வைத்து, நாளையில் இருந்து பயிற்சியை துவங்குங்கள். சரியாக விளையாடுபவர்களுக்குத்தான் அணியில் ரெகுலராக இடம் கிடைக்கும். இதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்” என ரோஹித் ஷர்மா காட்டமாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்