ஆப்நகரம்

IND vs IRE: ‘அப்போ தினேஷ் கார்த்திக்’…இப்போ ருதுராஜை அசிங்கப்படுத்திய ஹார்திக்: ரசிகர்கள் கொந்தளிப்பு!

ருதுராஜ் கெய்க்வாட்டை தினேஷ் கார்த்திக் அசிங்கப்படுத்திவிட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Samayam Tamil 27 Jun 2022, 6:08 am
இந்தியா, அயர்லாந்து இடையில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி டப்லினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
Samayam Tamil ருதுராஜ் கெய்க்வாட், ஹார்திக் பாண்டியா


இறுதியில் 12 ஓவர்கள் கொண்ட போட்டியாக ஆட்டம் நடைபெற்றது.

அயர்லாந்து இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணியில் ஓபனர்கள் ஸ்டெர்லிங் 4 (5), பல்பிர்னி 0 (2), டிபனி 8 (9) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். அனுத்து ஹேரி டெக்டர் 33 பந்துகளில் 6 பவுண்டி, 3 சிக்ஸர்கள் உட்பட 64 ரன்களை குவித்து அசத்தினார்.

தொடர்ந்து டக்கர் 16 பந்துகளில் 18 ரன்கள் அடித்தார். இதனால், அயர்லாந்து அணி 12 ஓவர்களில் 108/4 ரன்களை சேர்த்தது.

ருதுராஜ் களமிறங்கவில்லை:

இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்களாக தீபக் ஹூடா, இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். ருதுராஜ் கெய்க்வாட்டை களமிறக்கவில்லை. சரி ஒன் டவுனாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படியும் நடக்கவில்லை. அடுத்து 3 விக்கெட்கள் விழுந்தப் பிறகும் ருதுராஜ் களமிறக்கப்படவில்லை.

ரசிகர்கள் அதிருப்தி:

இது கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. ருதுராஜ் ஓபனராக மட்டுமே களமிறங்க கூடியவர். குறைந்தபட்சம் ஒன் டவுனாக கூற களமிறக்கியிருக்கலாம். ஆனால், அவரை ஹார்திக் கடைசிவரை களமிறக்கவில்லை. இதன்மூலம், ருதுராஜின் மன உறது குறைய அதிக வாய்ப்புள்ளது எனக் கூறி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியா அபார வெற்றி:

இந்திய அணியில் ஓபனர் தீபக் ஹூடா 47* (29), இஷான் கிஷன் 26 (11), ஹார்திக் பாண்டியா 24 (12) ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், இந்தியா 9.2 ஓவர்களில் 111/3 ரன்களை சேர்த்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ஹூடா, தினேஷ் கார்த்திக் 5* (4) கடைசிவரை களத்தில் இருந்தார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்