ஆப்நகரம்

IND vs IRE: ‘வெறித்தனமான பேட்டிங்’…தீபக் ஹூடா மிரட்டல் சதம்: சாதனை பார்டனர்ஷிப்…இந்தியா ரன் குவிப்பு!

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா ரன் குவிப்பில் ஈடுபட்டது.

Samayam Tamil 28 Jun 2022, 10:39 pm
Samayam Tamil தீபக் ஹூடா
அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றியைப் பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் இருவரும் ஓபனர்களாக களமிறங்கினர். இதில் இஷான் கிஷன் 5 பந்துகளில் 3 ரன்களை மட்டும் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பெரிய பார்ட்னர்ஷிப்:

இதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா இருவரும் பிரமாண்ட பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த பார்டனர்ஷிப் 50, 100, 150 என அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தது.

இருவரும் அரை சதம் கடந்து அசத்தினார். அயர்லாந்து பௌலர்களால் இருவரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இறுதியில் சாம்சன் 42 பந்துகளில் 77 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த பார்ட்னர்ஷிப் 87 பந்துகளில் 176 ரன்களை குவித்து அசத்தியது. டி20 கிரிக்கெட்டில், இந்தியாவின் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் இதுதான். இதற்குமுன் 2017-ல் ரோஹித், ராகுல் 165 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது.

ஹூடா சதம்:

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் தீபக் ஹூடாவுடன், சூர்யகுமார் யாதவ் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அப்போதும் அதிரடி தொடர்ந்துகொண்டுதன் இருந்தது. இந்நிலையில் ஹூடா 55 பந்துகளில் சதம் அடித்தார். இந்தியாவுக்காக சதம் அடித்தோர் பட்டியலில் ரோஹித் ஷர்மா (4) கே.எல்.ராகுல் (2) ஆகியோருக்கு அடுத்து சுரேஷ் ரெய்னாவுடன் (1) மூன்றாவது இடத்தை பகிர்ந்துகொண்டார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே சூர்யகுமார் 15 (5) ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். தொடர்ந்து சதம் அடித்த தீபக் ஹூடாவும் 104 (57 ஆட்டமிழந்தார். அவர் 9 பவுண்டரிகளையும், 6 சிக்ஸர்களையும் அடித்திருந்தார். இந்நிலையில் 19ஆவது ஓவரில் தினேஷ் கார்த்திக், அக்சர் படேல் இருவரும் அடுத்தடுத்து கோல்டன் ஆனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 227/7 ரன்களை சேர்த்தது. ஹார்திக் பாண்டியா 15 (9) கடைசிவரை களத்தில் இருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்