ஆப்நகரம்

IND vs IRE 1st T20: ‘ஓபனர் தீபக் ஹூடா அதிரடி’…புவி உலக சாதனை: இந்தியா அசால்ட்டு வெற்றி!

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.

Samayam Tamil 27 Jun 2022, 5:49 am
இந்தியா, அயர்லாந்து இடையில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி டப்லினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
Samayam Tamil இந்தியா vs அயர்லாந்து


இறுதியில் 12 ஓவர்கள் கொண்ட போட்டியாக ஆட்டம் நடைபெற்றது.

அயர்லாந்து இன்னிங்ஸ்:


முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணியில் ஓபனர்கள் ஸ்டெர்லிங் 4 (5), பல்பிர்னி 0 (2), டிபனி 8 (9) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். அனுத்து ஹேரி டெக்டர் 33 பந்துகளில் 6 பவுண்டி, 3 சிக்ஸர்கள் உட்பட 64 ரன்களை குவித்து அசத்தினார்.

தொடர்ந்து டக்கர் 16 பந்துகளில் 18 ரன்கள் அடித்தார். இதனால், அயர்லாந்து அணி 12 ஓவர்களில் 108/4 ரன்களை சேர்த்தது.

புவி உலக சாதனை:

இப்போட்டியில் பவர் பிளேவில் புவனேஷ்வர் குமார், ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் பவர்பிளேவில் அதிக விக்கெட்களை (31) கைப்பற்றிய பௌலராக திகழ்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உம்ரான் மாலிக் ஒரு ஓவரில் 14 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

இந்திய இன்னிங்ஸ்:

அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக தீபக் ஹூடா ஓபனராக களமிறங்கினார். இவரும், இஷான் கிஷனும் துவக்கம் முதலே அதிரடி காட்டினார்கள். இந்நிலையில் இஷான் கிஷன் 26 (11) ரன்கள் மட்டும் அடித்து நடையைக் கட்டினார். அடுத்து சூர்யகுமார் யாதவ் கோல்டன் டக் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஹார்திக் பாண்டியா 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து நடையைக் கட்டிய நிலையில், தினேஷ் கார்த்திக் 4 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். மறுபக்கம் ஓபனிங் களமிறங்கியிருந்த தீபக் ஹூடா 47 (29) கடைசிவரை களத்தில் இருந்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்தியா 9.2 ஓவர்களில் 111/3 ரன்கள் சேர்த்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ருதுராஜ் கடைசிவரை களமிறக்கப்படவில்லை.

இரண்டாவது மற்றும் கடைசிப் போட்டி நாளை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்