ஆப்நகரம்

IND vs IRE: ‘ருதுராஜை’…ஓபனராக களமிறக்காதது ஏன்? ஹார்திக் பாண்டியா பதில் இதுதான்..வெளிப்படையான பேச்சு!

ருதுராஜ் கெய்க்வாட்டை களமிறக்காதது ஏன் என்பது குறித்து ஹார்திக் பாண்டியா பேசியுள்ளார்.

Samayam Tamil 27 Jun 2022, 5:19 pm
இந்தியா, அயர்லாந்து இடையில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி டப்லினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
Samayam Tamil ருதுராஜ் கெய்க்வாட், ஹார்திக் பாண்டியா


இறுதியில் 12 ஓவர்கள் கொண்ட போட்டியாக ஆட்டம் நடைபெற்றது.

அயர்லாந்து இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணியில் ஓபனர்கள் ஸ்டெர்லிங் 4 (5), பல்பிர்னி 0 (2), டிபனி 8 (9) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். அனுத்து ஹேரி டெக்டர் 33 பந்துகளில் 6 பவுண்டி, 3 சிக்ஸர்கள் உட்பட 64 ரன்களை குவித்து அசத்தினார்.

தொடர்ந்து டக்கர் 16 பந்துகளில் 18 ரன்கள் அடித்தார். இதனால், அயர்லாந்து அணி 12 ஓவர்களில் 108/4 ரன்களை சேர்த்தது.

இந்தியா அபார வெற்றி:

இந்திய அணியில் ஓபனர் தீபக் ஹூடா 47* (29), இஷான் கிஷன் 26 (11), ஹார்திக் பாண்டியா 24 (12) ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், இந்தியா 9.2 ஓவர்களில் 111/3 ரன்களை சேர்த்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ஹூடா, தினேஷ் கார்த்திக் 5* (4) கடைசிவரை களத்தில் இருந்தார்கள்.

ருதுராஜ் களமிறங்கவில்லை:

இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்களாக தீபக் ஹூடா, இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். ருதுராஜ் கெய்க்வாட்டை களமிறக்கவில்லை. சரி ஒன் டவுனாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படியும் நடக்கவில்லை. அடுத்து 3 விக்கெட்கள் விழுந்தப் பிறகும் ருதுராஜ் களமிறக்கப்படவில்லை.

ரசிகர்கள் அதிருப்தி:

இது கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. ருதுராஜ் ஓபனராக மட்டுமே களமிறங்க கூடியவர். குறைந்தபட்சம் ஒன் டவுனாக கூற களமிறக்கியிருக்கலாம். ஆனால், அவரை ஹார்திக் கடைசிவரை களமிறக்கவில்லை. இதன்மூலம், ருதுராஜின் மன உறுது குறைய அதிக வாய்ப்புள்ளது எனக் கூறி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

ஹார்திக் பேட்டி:

இந்நிலையில் ருதுராஜை ஏன் களமிறக்கவில்லை என்பது குறித்து ஹார்திக் பாண்டியா பேசியுள்ளார். அதில், “ருதுராஜுக்கு பின்னங்காலின் சதைப் பகுதியில் சிறிய பிரச்சினை இருந்தது. அதோடு அவரை விளையாட வைத்தால், காயத்தின் தன்மை பெரியதாக மாறிவிடும். இதனால்தான், அவரை விளையாட வைக்கவில்லை. அதனை நாங்கள் விரும்பவில்லை” எனக் கூறினார்.

அது எப்படி?

ருதுராஜூக்கு காயம் இருந்திருந்தால், அவருக்கு பதில் சஞ்சு சாம்சனை சேர்த்திருக்கலாம். காயத்துடன் ஒருவரை எப்படி விளையாட அனுமதித்தீர்கள் என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதன்மூலம், ஹார்திக் தன் தவறை மறைக்க பொய் சொல்வதுபோல் இருக்கிறது என கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்