ஆப்நகரம்

IND vs IRE: ‘2 அறிமுக வீரர்களுக்கு’…வாய்ப்பு உறுதி: ஹார்திக் பாண்டியா ஓபன் டாக்…யார் அவர்கள்?

அயர்லாந்து தொடரில் இரண்டு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என ஹார்திக் பாண்டியா பேசியுள்ளார்.

Samayam Tamil 26 Jun 2022, 6:17 am
சமீபத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்க தொடர் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இளம் இந்திய அணி அயர்லாந்தில் இன்றும், நாளையும் டி20 போட்டியில் பங்கேற்க உள்ளது. ஹார்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil ஹார்திக் பாண்டியா


இளம் அணி:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இளம் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி இருவருக்கும் அயர்லாந்து தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தென்னாப்பிரிக்க தொடரில் அபாரமாகச் செயல்பட்ட தினேஷ் கார்த்திக்கும் இத்தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடும் போட்டி:

தினேஷ் கார்த்திக், டி20 உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வுசெய்யப்பட அதிக வாய்ப்புள்ளது என்றால், அவருக்கு இனி சில போட்டிகளில் ரெகுலராக XI அணியில் வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. இதனால், அவர் சேர்க்கப்படுவது உறுதி. மேலும், டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த இளம் வீரர்கள் இத்தொடரில் அபாரமாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதன்காரணமாக, இத்தொடர் மீது அதிக எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

ஹார்திக் பாண்டியா:

இந்நிலையில் அயர்லாந்து தொடரில் இரண்டு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கேப்டன் ஹார்திக் பாண்டியா வெளிப்படையாக பேசியுள்ளார். “புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கத்தான் நாங்கள் விரும்புகிறோம். அதே நேரத்தில் சிறந்த XI அணியை களமிறக்குவது மிகவும் முக்கியம். அயர்லாந்து தொடரில் இரண்டு வீரர்கள் அறிமுக போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் சிறந்த லெவன் அணியை உறுதி செய்ய வேண்டியது எனது கடமை” எனக் கூறினார்.

மேலும் பேசிய ஹார்திக் பாண்டியா, “நான் இங்கு எதையும் காட்ட வரவில்லை. இந்திய அணியை வழிநடத்த அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எனக்கு மிகப்பெரிய விஷயம். இத்தொடரில் மிகச்சிறப்பாக அணியை வழிநடத்தி வெற்றியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது ஒரே நோக்கம்” எனத் தெரிவித்தார்.

அந்த 2 பேர்:

ஹார்திக் பாண்டியா கூறியதுபோல், இரண்டு அறிமுக வீரர்கள் விளையாட அதிக வாய்ப்புள்ளது. ஒன்று ராகுல் திரிபாதி. மிடில் வரிசையில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே இருப்பதால், இவர் களமிறங்க வாய்ப்புள்ளது. மேலும் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோரில் ஒருவர் களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்