ஆப்நகரம்

கோலி ஒன்னும் சூப்பர் மேன் இல்லையே? - புகழ்வதுபோல போட்டு தாக்கும் கங்குலி

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது குறித்து கங்குலி, கோலி ஓன்னும் அதிசய மனிதன் கிடையாது. அவரும் மற்றவரைப் போலத்தான் என தெரிவித்துள்ளார்.

TOI Sports 24 Oct 2017, 4:45 pm
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது குறித்து கங்குலி, கோலி ஓன்னும் அதிசய மனிதன் கிடையாது. அவரும் மற்றவரைப் போலத்தான் என தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ind vs nz 2017 virat kohli is not superhuman he will lose games once in a while sourav ganguly
கோலி ஒன்னும் சூப்பர் மேன் இல்லையே? - புகழ்வதுபோல போட்டு தாக்கும் கங்குலி

கோலி சூப்பர்மேனா?
ஒரு போட்டியில் தோற்றதற்கு கோலியை மீதான விமர்சனங்கள் தேவையற்றது. எந்த ஒரு சிறந்த கேப்டனாக இருந்தாலும் தோல்வி என்ற ஒன்றை சந்திக்காமல் இருக்க முடியாது.

கோலி தனது 200வது போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். இருப்பினும் போட்டியில் தோல்வியடைந்தது வருத்தமான விஷயம். கோலி ஒரு சிறந்த கேப்டன். இருந்தாலும் எப்போதாவது தோல்வியடைவது சகஜமே.
தோனி கூட வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தவர் தான். அதே போல தென் ஆப்ரிக்காவும், வெஸ்ட் இண்டீஸ் என நம் நாட்டிற்கு வந்து நம் அணியை வென்றதெல்லாம் வரலாறு.

இரு தினங்களுக்கு முன் தோனியை விட சஹா மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் என கூறியிருந்தார். தற்போது கோலி ஒன்றும் அதிசய மனிதன் இல்லை என கூறி புகழ்ந்து, கலாய்ப்பதை வேலையாக வைத்துள்ளார் கங்குலி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்