ஆப்நகரம்

Ind vs Pak: உலக கோப்பை இனி பிரதமர் மோடி கையில் : பிசிசிஐ முக்கிய முடிவு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவதா இல்லையா என்ற முடிவை மத்திய அரசு தான் எடுக்கும் என இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Samayam Tamil 22 Feb 2019, 4:21 pm
புதுடெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவதா இல்லையா என்ற முடிவை மத்திய அரசு தான் எடுக்கும் என இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Samayam Tamil modi


மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடக்க உள்ளது. ரவுண்ட்ராபின் முறையில் நடக்க உள்ளது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டி ஜூன் மாதம் 16 விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை 2019 போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கக் கூடிய உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த செய்த ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரலும் பொது ராணுவ தளவாடங்களின் தலைவராக இருந்த ரவீந்திர தோட்கே உடன் பிசிசிஐ தலைவர் வினோத் ராய் உள்ளீட்டோர் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினர்.


பாகிஸ்தான் உடன் இந்தியா உலகக் கோப்பையில் விளையாடாவிட்டால் என்ன ஆகும்? யாருக்கு இழப்பு : ஐசிசி விளக்கம்

பிசிசிஐ முடிவு:
இதில் எந்த முடிவும் தனியாக எடுக்க முடியாது. எந்த முடிவாக இருந்தாலும் அது மத்திய அரசு தான் எடுக்க வேண்டும். இது இருநாடுகளுக்கிடையே உள்ள பிரச்னை. அதில் பிசிசிஐ தனியாக எந்த முடிவும் எடுக்க முடியாது என கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் வினோத் பேசியுள்ளார்.


மத்திய அரசு எந்த முடிவு எடுத்தாலும் அதன் படி பிசிசிஐ நடக்கும் என தெரிவித்துள்ளது. இதன் மீதான முடிவை பிரதம் தான் தீர்மானிக்க வாய்ப்புள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்