ஆப்நகரம்

IND vs SA 2nd T20: டாஸ் வென்றது தென்னாப்பிரிக்கா...டி காக் நீக்கம்: லெவன் அணி இதுதான்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்றுள்ளது.

Samayam Tamil 12 Jun 2022, 6:36 pm
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று கட்டாக்கில் துவங்கவுள்ளது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
Samayam Tamil ரிஷப் பந்த், டெம்பா பவுமா


தென்னாப்பிரிக்க அணியில் டி காக்கிற்கு பதிலாக ஹென்ட்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் இளம் வீரர் ஸ்டப்ஸ் நீக்கப்பட்டு விக்கெட் கீப்பர் கிளாசின் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

இந்திய XI அணி: இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஜ்வேந்திர சஹல், ஆவேஷ் கான்.

தென்னாப்பிரிக்க XI அணி:
டெம்பா பவுமா, ஹென்ட்ரிக்ஸ், டுவைன் பிரிடோரியஸ், வன் டீர் துஷன், டேவிட் மில்லர், க்ளாசின், வைன் பர்னல், காகிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்கியா, லுங்கி நெகிடி, சாம்சி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்