ஆப்நகரம்

IND vs SA: ‘இந்திய அணித் தேர்வில்’…உள்ள மாபெரும் குறைபாடு இதுதான்: தமிழக வீரர சேக்கல: கைப் காட்டம்!

அணித் தேர்வில் தவறு உள்ளதாக முகமது கைப் பேசியுள்ளார்.

Samayam Tamil 11 Jun 2022, 6:47 am
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 211/4 ரன்கள் சேர்த்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி 19.1 ஓவர்களில் இலக்கை துரத்தி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
Samayam Tamil முகமது கைப்


ரிஷப் கேப்டன்ஸி தவறு:

இப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம், ரிஷப் பந்த் கேப்டன்ஸிதான். கே.எல்.ராகுல் விலகியதால், கேப்டன் பதவியை ஏற்ற அவர், ஸ்பின்னர்களை சரியாக பயன்படுத்தவில்லை. ஐபிஎல் 15ஆவது சீசனில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய சஹலுக்கு 2 ஓவர்களை மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரை வீச வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாததால் சஹலுக்கு கொடுத்தார்.

மேலும் ஆல்-ரவுண்டர் அக்சர் படேலுக்கு நான்கு ஓவர்களையும் பந்துவீச வைத்தார். இப்படி பௌலர்களை சிறப்பாக கையாளாததுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த இரண்டு ஸ்பின்னர்களும் லெக் ஸ்பின்னர்கள்தான். பெஞ்சில் அமர்ந்திருக்கும் ரவி பிஷ்னோயும் லெக் ஸ்பின்னர்கள். ஒரு ஆஃப் ஸ்பின்னரைகூட இத்தொடருக்கு தேர்வு செய்யவில்லை.

முகமது கைப் பேட்டி:

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணி முன்னாள் வீரர் முகமது கைப், இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளார்.

‘‘இந்தியா, தென்னாப்பிரிக்கா இரண்டு அணிகளும் பலமிக்க அணிகள்தான். ஆனால், இந்திய அணி பந்துவீச்சில் ஒரு தவறு இருக்கிறது. சஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய் ஆகிய மூன்று ஸ்பின்னர்களும் லெக் ஸ்பின்னர்களாக இருப்பதுதான் தவறு. மூன்று லெக் ஸ்பின்னர்களை வைத்து, எங்கேயும் சிறப்பாக விளையாட முடியாது. லெக், ஆஃப் ஸ்பின்னர்கள் இருந்ததால்தான், பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியும்’’ எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், ‘‘அஸ்வின் அணியில் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. 2021 உலகக் கோப்பையில் இடம் பிடித்த அவர் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். 3 லெக் ஸ்பின்னர்களில் ஒருவரை கழற்றிவிட்டு, ஆஃப் ஸ்பின்னர் அஸ்வினை சேர்த்தால் நன்றாக இருக்கும். பேட்டிங், பௌலிங் இரண்டிலும் அஸ்வினால் சிறப்பாக செயல்பட முடியும்’’ எனத் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்