ஆப்நகரம்

IND vs SL Predicted XI: ‘முதல் ஒருநாள் போட்டி’…சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? உத்தேச XI இதுதான்!

இந்தியா, இலங்கை இடையிலான முதல் டி20 போட்டி ஜனவரி 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 1 Jan 2023, 7:33 pm
இந்திய அணி சமீபத்தில் வங்கதேசம் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி 2-0 என்ற கணக்கில் அபார வெற்றியைப் பெற்றது.
Samayam Tamil ஹார்திக் பாண்டியா, இந்திய அணி


இத்தொடர் முடிந்த உடன் நாடு திரும்பியுள்ள இந்திய அணி, அடுத்து இலங்கைக்கு எதிரான முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடும்.

டி20 தொடர்:

முதலில் துவங்கும் டி20 தொடர் ஜனவரி 3, 5, 7 ஆகிய தேதிகளில் மும்பை, புனே, ராஜ்கோட் ஆகிய நகரங்களில் நடைபெறும். போட்டிகள் அனைத்தும் இரவு 7 மணிக்கு துவங்கி நடைபெறும்.

இளம் இந்திய அணி:

இந்த டி20 தொடரில் இந்திய இளம் டி20 அணிதான் விளையாட உள்ளது. ரோஹித் ஷர்மா, விராட் கோலி, புவனேஷ்வர் குமார் போன்றவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால், லெவன் அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

ஓபனர்கள்:

இந்திய அணியில் ஓபனர்களாக ஷுப்மன் கில், இஷான் கிஷன் ஆகியோர் இருப்பார்கள் எனக் கருதப்படுகிறது. இதில், ஷுப்மன் கில் இத்தொடரில் தனது திறமையை நிரூபிக்கவில்லை என்றால், அடுத்தடுத்த டி20 தொடர்களில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்தான்.

மிடில் வரிசை:

மிடில் வரிசையில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், கேப்டன் ஹார்திக் பாண்டியா ஆகிய பலமிக்கவர்கள் இடம்பெறுவதால், இளம் ஓபனர்கள் பலமில்லாமல் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல்-ரவுண்டர்கள்:

தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆல்-ரவுண்டர்களாக இடம்பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி திறமையை நிரூபிக்கும் பட்சத்தில், தீபக் ஹூடாவுக்கு மாற்றாக இவர்தான் இனி ரெகுலராக இடம்பெற வாய்ப்புள்ளது.

பௌலர்கள்:

வேகப்பந்து வீச்சாளர்களாக ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது. இதில் ஹர்ஷல் படேல் சிறப்பாக செயல்படவில்லை என்றால், அடுத்து அணியிலிருந்து கழற்றிவிடுவார் எனக் கருதப்படுகிறது.

ஸ்பின்னராக யுஜ்வேந்திர சஹல் இடம்பெறுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. சஹல் பார்மில் இருப்பதால், பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இந்திய உத்தேச லெவன் அணி: ஷுப்மன் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், யுஜ்வேந்திர சஹல்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்