ஆப்நகரம்

இங்கிலாந்தை நோகடித்த கோலி, ஜெயந்த் ஜோடி

இந்தியா இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்டின் 4வது நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 579 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

TNN 11 Dec 2016, 11:56 am
மும்பை: இந்தியா இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்டின் 4வது நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 579 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
Samayam Tamil india going well ahead to clinch the series with kohlis double ton
இங்கிலாந்தை நோகடித்த கோலி, ஜெயந்த் ஜோடி


இந்தியா இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 400 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின் முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி 4வது நாள் உணவு இடைவேளையின் போது 7 விக்கெட் இழப்புக்கு 579 ரன்கள் குவித்துள்ளது.

இந்த செஷனில் 28 ஓவர்கள் வீசப்பட்டுள்ளது. இதில் விக்கெட் ஏதும் இழக்காமல் இந்திய அணி 128 ரன்கள் விளாசியுள்ளது. காலை ஆட்டம் தொடங்கியது முதலே இங்கிலாந்து பவுலர்களை கோலியும், ஜெயந்த் யாதவும் அடித்து நொறுக்கத் தொடங்கினர். கிட்டத்தட்ட எல்லா ஓவரிலும் ஒரு பவுண்டரி அடித்து இங்கிலாந்து வீரர்களை நோகடித்தனர்.

எந்தவித சிக்கலும் இல்லாமல் பந்துகளை எதிர்கொண்ட விராத் கோலி, ஜெய்ந்த் யாதவ் ஜோடி 319 பந்துகளில் 215 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. ஜெய்ந்த 92 ரன்களிலும், கோலி 212 ரன்களிலும் களத்தில் உள்ளனர். ஜெய்ந்த் சதம் அடித்த பிறகு அல்லது இந்திய அணி 200-250 ரன்கள் முன்னிலை பெற்ற பிறகு கோலி இந்திய அணி பேட்டிங்கை டிக்ளேர் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்