ஆப்நகரம்

ஜோகனஸ்பெர்க் மைதானத்தில் டிராவிட்டை தொடர்ந்து கெத்து காட்டிய கோலி

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஜோகனஸ்பெர்க்கில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதுவரை இந்த மைதானத்தில் இந்தியா தோல்வியே பார்க்காத சாதனை படைத்துள்ளது.

Samayam Tamil 27 Jan 2018, 9:56 pm
ஜோகனஸ்பெர்க் : தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஜோகனஸ்பெர்க்கில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதுவரை இந்த மைதானத்தில் இந்தியா தோல்வியே பார்க்காத சாதனை படைத்துள்ளது.
Samayam Tamil india have never lost a test match at johannesburg
ஜோகனஸ்பெர்க் மைதானத்தில் டிராவிட்டை தொடர்ந்து கெத்து காட்டிய கோலி


தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியை வென்று தொடரை வென்றிருந்த தென் ஆப்ரிக்கா அணி 3வது டெஸ்ட் போட்டியின் இன்றைய 4வது நாள் ஆட்டத்தில் முன்னதாக ஆதிக்கம் செலுத்தியது. எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பவுலர்களின் சிறப்பான பவுலிங்கால் இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றுள்ளது.

ராசியான ஜோகனஸ்பெர்க் மைதானம் :
ஜோகனஸ்பெர்க் மைதானத்தில் விளையாடியுள்ள இந்திய அணி இதுவரை நடந்த 5 போட்டிகளில் இரண்டில் வெற்றியும், 3 போட்டி டிராவும் செய்தது.

2006ல் டிராவிட் தலைமையிலான இந்திய அணியும், தற்போது கோலி தலைமையிலான அணியும் வெற்றி பெற்று சாதித்துள்ளது. 2013ல் தோனி கேப்டனாக இருந்த போது டிரா செய்திருந்தது.

India have never lost a Test match at Johannesburg. 1992: Draw, 1997: Draw, 2006: Win, 2013: Draw, 2018: Win

அடுத்த செய்தி

டிரெண்டிங்