ஆப்நகரம்

டெஸ்ட் கிரிக்கெட் : வெற்றியை நோக்கி இந்தியா!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் கடைசி நாளான இன்று இந்தியா வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. நியூசிலாந்து அணி 196 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

TNN 26 Sep 2016, 11:29 am
கான்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் கடைசி நாளான இன்று இந்தியா வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. நியூசிலாந்து அணி 196 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
Samayam Tamil india in strong position in test against new zealand
டெஸ்ட் கிரிக்கெட் : வெற்றியை நோக்கி இந்தியா!


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் கான்பூரின் கிரீன் பார்க் மைதானத்தில் நடக்கிறது. இது இந்திய அணி பங்கேற்கும் 500வது டெஸ்ட் போட்டியாகும்.

இதன் முதல் இன்னிங்சில் இந்திய அணி 318 ரன்கள், நியூசிலாந்து அணி, 262 ரன்கள் எடுத்தது. நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில், 5 விக்கெட்டுக்கு 377 ரன்கள் எடுத்திருந்த பொழுது டிக்லெர் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி 434 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாம் இன்னிங்சை தொடங்கியது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 93 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து இருந்தது.

முதல் டெஸ்டின் ஐந்தாம் நாள் மற்றும் கடைசி நாளான இன்று பேட்டிங்கை செய்துவரும் நியூசிலாந்து அணி 196 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. இதனால் இந்திய அணி வெற்றியை நோக்கி வலுவான நிலையில் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்