ஆப்நகரம்

Ranchi Test: டெஸ்ட் வரலாற்றில் இது மெகா சாதனை... சிக்சரில் புது உலக சாதனை படைச்ச இந்திய டீம்...!

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிக்சர் மழை பொழிந்த இந்திய பேட்ஸ்மேன்கள் புது உலக சாதனை படைத்தனர்.

Samayam Tamil 20 Nov 2019, 12:09 pm
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. விசாகப்பட்டினம் மற்றும் புனேவில் நடந்த முதல் இரண்டு டெஸ்டிலும் இந்திய அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை ஏற்கனவே இந்திய அணி 2-0 என கைப்பற்றிவிட்டது.
Samayam Tamil Umesh Yadav


சிக்சர் சாதனை:
இந்நிலையில் ராஞ்சியில் நடக்கும் மூன்றாவது டெஸ்டிலும் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 497 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இதற்கிடையில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிக்சர் மழை பொழிய இந்திய அணி புது உலக சாதனையை அரங்கேற்றியது.

சேவாக் சாதனையை சமன் செஞ்ச ரோஹித்....: மூணு வருஷ காத்திருப்பதை தகர்த்த ரஹானே!

47 சிக்சர்கள்:
இந்திய அணி வீரர்கள் இந்த தொடரில் மொத்தமாக இதுவரை 47 சிக்சர்கள் பறக்கவிட்டுள்ளனர். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய ஆஸ்திரேலிய அணியின் (40 சிக்சர்கள், எதிர்- இங்கிலாந்து, 2013/14) உலக சாதனையை இந்திய அணி காலி செய்தது .


இதுவரை டெஸ்ட் வரலாற்றில் எவனும் செய்யாத சாதனை...: டபுள் செஞ்சுரியில் சேவாக்கையே மிஞ்சிய ‘டான்’ ரோஹித்....!

ஒரே டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய அணிகள்:
இந்தியா - 47 சிக்சர்கள் (எதிர்- தென் ஆப்ரிக்கா, 2019/20)
ஆஸ்திரேலியா - 40 சிக்சர்கள் (எதிர்- இங்கிலாந்து, 2013/14)
பாகிஸ்தான் - 37 சிக்சர்கள் (எதிர்- இந்தியா, 2005/06)
இங்கிலாந்து - 36 சிக்சர்கள் (எதிர்- ஆஸ்திரேலியா, 2005)

அடுத்த செய்தி

டிரெண்டிங்