ஆப்நகரம்

பட்டையை கிளப்பிய பட்லர் : இந்திய அணிக்கு 160 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பட்லர் அரைசதம் அடித்து அசத்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு, 159 ரன்கள் எடுத்தது.

Samayam Tamil 3 Jul 2018, 11:49 pm
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பட்லர் அரைசதம் அடித்து அசத்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு, 159 ரன்கள் எடுத்தது.
Samayam Tamil 278011.4


இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராட்போர்ட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியைப் பொறுத்தவரை, அயர்லாந்து உடனான போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட தோனி, புவனேஷ்குமார், தவான் உள்ளிட்டோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். தவிர, ரெய்னாவும், கேஎல் ராகுலும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குல்தீப் மிரட்டல்....
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் ஜேசன் ராய் (30) ஓரளவு கைகொடுத்தார். அடுத்து வந்த ஹேல்ஸ் (8), மார்கன் (7), பேர்ஸ்டோன் (0), ரூட் (0) ஆகியோரை குல்தீப் வெளியேற்றினார். அடுத்து வந்த மொயின் அலி (6) பாண்டியா வேகத்தில் சிக்கினார்.

பட்லர் பிரமாதம்....
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் பட்டையை கிளப்பிய பட்லர் அரைசதம் கடந்து அசத்த இங்கிலாந்து அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 160 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்