ஆப்நகரம்

ஆஸி ஆல்-அவுட்: இந்தியாவிற்கு கடின இலக்கு!

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸ் நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 18 Jan 2021, 1:31 pm
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது (கடைசி) டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 369/10 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 336 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆன நிலையில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை 294/10 ரன்களுக்கு முடித்துக் கொண்டு, இந்திய அணிக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. நான்காவது நாள் இரண்டாவது செஷன் நிறைவடைந்தபோது பேட் கம்மின்ஸ் 2 (16), மிட்செல் ஸ்டார்க் 1 (1) களத்தில் இருந்தனர்.
Samayam Tamil Ind vs Aus


ஆஸ்திரேலிய அணி 276 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கடைசி செஷன் துவங்கியவுடன் ஸ்டார்க் ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இந்திய பௌலர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இதனால், லாதன் லைன் 13 ரன்களுக்கும், ஜோஸ் ஹேசில்வுட் 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி 294 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி, 328 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

தப்புக் கணக்கு போட்டவர்களுக்கு பதிலடி கொடுக்கும் இந்திய அணி!
இந்தியத் தரப்பில் முகமது சிராஜ் 5 விக்கெட்களையும், ஷர்துல் தாகூர் 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். தற்போது துவக்க வீரர்கள ரோஹித் ஷர்மா 4* (6), ஷுப்மன் கில் 0* (5) களத்தில் உள்ளனர். மழை காரணமாக நான்காவது நாள் ஆட்டத்தின் கடைசி செஷன் முன்கூட்டியே முடிக்கப்பட்டது.

நாளைய ஆட்டத்திலும் மழை குறுக்கீடு இருக்கும். குறிப்பாகக் கடைசி செஷனில் மழை பெய்யும் என பிரிஸ்பேன் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், முதல் இரண்டு செஷன்களில் இந்திய அணி அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா குமார் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானம்!
இந்தியா, ஆஸ்திரேலியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிந்து இரு அணிகளும் 1-1 எனச் சமநிலையில் உள்ளன. தற்போது நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் வெற்றிபெறும் அணி தொடரைக் கைப்பற்றும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்