ஆப்நகரம்

டி20 தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் இந்திய அணி

ஐசிசி வெளியிட்டுள்ள டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Samayam Tamil 1 Jul 2018, 2:14 pm
ஐசிசி வெளியிட்டுள்ள டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
Samayam Tamil 277850


சில நாட்களுக்கு முன், அயர்லாந்துக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி இரண்டிலும் அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஐசிசி தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

பாகிஸ்தான் அணி இந்திய அணியைவிட 8 புள்ளிகள் அதிகமாகப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி 3வது இடத்துக்குச் சறுக்கியுள்ளது.

இந்திய அணி நாளை மறுநாள் முதல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பும் இந்திய அணிக்கு அதிகமாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்