ஆப்நகரம்

நம்பர்-1 இடத்தில் நீடிக்கும் இந்திய அணி..: இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

துபாய்: சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி நம்பர்-2 இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

Samayam Tamil 23 Oct 2019, 5:05 pm

ஹைலைட்ஸ்:

  • அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி நம்பர்-1 (119) இடத்தில் உள்ளது.
  • நியூசிலாந்து (109), இங்கிலாந்து (104) அணிகள் அடுத்த இரண்டு இடத்தில் உள்ளது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Team India
சர்வதேச டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலை, ஐ.சி.சி வெளியிட்டது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி (926 புள்ளிகள்) தனது இரண்டாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.
ஸ்மித் நம்பர் 1
ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (937 புள்ளிகள்) நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (878) மூன்றாவது இடத்தில் உள்ளனர். நான்காவது இடத்தில் இந்திய வீரர் புஜாரா (817) உள்ளார்.

இதெல்லாம் சுத்தமா கொஞ்சம் கூட வேலைக்கே ஆகாது..: பிசிசிஐயை எச்சரித்த ‘கிங்’ கோலி!

மற்றொரு இந்திய வீரர் ரஹானே (751) 5வது இடத்துக்கு முன்னேறினார். ரோஹித் ஷர்மா (722) 10வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீரர்கள் யாரும் டாப்-10ல் இடத்திற்குள் இல்லை.

தக்க வைத்த பும்ரா
இதேபோல சிறந்த பவுலர்களுக்கான தரவரிசைப்பட்டியலில், இந்திய வீரர் பும்ரா (818) முன்றாவது இடத்தில் நீடிக்கிறார். அஸ்வின் (792) 7வது இடத்திற்கு முன்னேறினார். ரவிந்திர ஜடேஜா (753) 14வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முகமது ஷமி (711), இஷாந்த் சர்மா (660), உமேஷ் யாதவ் (600) ஆகியோர் முறையே 16, 21, 25வது இடங்களில் உள்ளனர்.

முடிவுக்கு வரும் நிர்வாகிகள் குழு சகாப்தம்...: பிசிசிஐ தலைவராக பதவியேற்கும் தாதா கங்குலி!

ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் (908), தென் ஆப்ரிக்காவின் காகிசோ ரபாடா (835) முதல் இரண்டு இடங்களில் நீடிக்கின்றனர்.

ரவிந்திர ஜடேஜா நம்பர்-2
ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா (414) இரண்டாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் (472) நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார். வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹாசன் (397) மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்