ஆப்நகரம்

பயிற்சி ஆட்டம்: சூர்யகுமார், மனிஷ் பாண்டே ரன்குவிப்பு…புவனேஷ்வர் குமார் அணி அபார வெற்றி!

ஷிகர் தவன், புவனேஷ்வர் குமார் அணிகளுக்கு இடையில் பயிற்சியாட்டம் நடைபெற்றது.

Samayam Tamil 6 Jul 2021, 7:04 am
இலங்கை சென்றுள்ள இளம் இந்திய அணி, தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளது. போட்டிகள் ஜூலை 13 முதல் 25 வரை நடைபெறும்.
Samayam Tamil இந்திய அணி


ஐபிஎல் வீரர்கள்:

ஐபிஎல் தொடரில் சிறப்பாக சோபித்த இளம் வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், சேத்தன் சகார்யா போன்றவர்கள் இந்த இலங்கை சுற்றுப் பயணத்தில் இடம்பெற்றுள்ளனர். இதனால் இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அணிக்கு கேப்டனாக ஷிகர் தவன் நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளராக ராகுல் திராவிட் செயல்படவுள்ளார்.

இலங்கையில் இந்திய அணி:


இதற்கான இந்திய அணி சமீபத்தில் இலங்கை சென்றடைந்தது. சில நாட்கள் தனிமை முகாமில் இருந்த அவர்கள் தற்போது பயிற்சியைத் தொடங்கிவிட்டனர். இதன் ஒருபகுதியாக இந்திய அணி வீரர்கள் இருகுழுக்களாக பிரிந்து பயிற்சியாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேப்டன் ஷிகர் தவன், துணைக் கேப்டன் புவனேஷ்வர் குமார் இருவரும்தான் இந்த அணிகளுக்கு கேப்டன்.

இந்த போட்டியை எந்த தொலைக்காட்சியும் நேரலை செய்யவில்லை. போட்டி முடிந்த பிறகு இந்திய அணி பந்துவீச்சு பயிற்சியாளர் பரஸ் மாம்ப்ரே இதுகுறித்து தகவல்களை வெளியிட்டார்.

பரஸ் மாம்ப்ரே பேட்டி:

பிசிசிஐ இணையதளத்தில் பேசிய பரஸ் மாம்ப்ரே, “இப்போட்டியில் டாஸ் வென்ற ஷிகர் தவன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் அடித்தது. ஓபனர் ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்கள் அடித்து, சிறந்த துவக்கத்தை ஏற்படுத்தினார். அடுத்து மனிஷ் பாண்டே 63 ரன்கள் குவித்து அசத்தினார்” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “புவனேஷ்வர் குமார் தலைமையிலான அணி இந்த 151 ரன்கள் இலக்கை 17 ஓவர்களில் துரத்தி வெற்றிபெற்றது. சூர்யகுமார் யாதவ் அரை சதம் அடித்தார், தேவ்தத் படிக்கல், பிரித்வி ஷா இருவரும் ஓபனிங் களமிறங்கி 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்” எனக் கூறினார்.

இந்தியா, இலங்கை இடையிலான ஒருநாள் போட்டிகள் ஜூலை 13, 16, 18ஆகிய தேதிகளில் நடைபெறும். இதனைத் தொடர்ந்து ஜூலை 21ஆம் தேதிமுதல் டி20 தொடர் ஆரம்பமாகும்.

விராட் கோலி, ஜஸ்பரீத் பும்ரா, ரோஹித் ஷர்மா போன்ற மூத்த வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி, தற்போது இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்