ஆப்நகரம்

குட்டி அணி அயர்லாந்துடன் இந்தியா மோதும் டி20 போட்டி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் விளையாட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

Samayam Tamil 12 Jan 2018, 12:03 pm
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் விளையாட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
Samayam Tamil india to tour ireland for two match t20i series
குட்டி அணி அயர்லாந்துடன் இந்தியா மோதும் டி20 போட்டி அறிவிப்பு


தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டி தொடர் முடிந்து, இந்தியாவில் நடக்கும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்கு முன்னர் அயர்லாந்து அணிகு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் இந்திய அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 27 மற்றும் 29ம் தேதிகளில் அயர்லாந்து தலைநகர் டப்லினில் இந்த போட்டி நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2007ம் ஆண்டு அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, அயர்லாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுடன் தலா ஒரு டி20 போட்டியில் மோதியது. அதோடு தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக மூன்று போட்டி கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதில் இந்திய அணி 2-1 என வென்றது.

அயர்லாந்து போட்டி தொடர் முடிந்த பின்னர் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள், ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

The Board of Control for Cricket in India, on Wednesday (January 10), announced the Indian team will play two T20Is against Ireland before they embark on a tour to England in July. The two-match series will be played in Dublin on June 27 and 29 respectively.
After their short tour of Ireland, India are scheduled to play three T20Is, three ODIs and five Tests in England.

அடுத்த செய்தி

டிரெண்டிங்