ஆப்நகரம்

Ind Vs Aus: இறுதியில் வேகம் எடுத்த ஆஸி. அணி: இந்தியாவுக்கு 299 ரன்கள் இலக்கு

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் சோ்த்தது.

Samayam Tamil 15 Jan 2019, 1:24 pm
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Shaun Marsh


இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டத்தில் இந்தியா களம் இறங்கி உள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தோ்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் புவனேஸ்வரின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தாா். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அலெக்ஸ் கேரி 18 ரன்களில் ஆட்டம் இழந்தாா்.


தொடா்ந்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகள் சரிந்த நிலையில் ஷான் மாா்ஸ், மேக்ஸ்வெல் கூட்டணி அமைத்து இந்தயி அணியினரின் பந்துவீச்சை எதிா்கொண்டனா். சிறப்பாக விளையாடிய ஷான் மாா்ஸ் 123 பந்துகளில் 3 சிக்சா், 11 பவுண்டரிகளுடன் 130 ரன்கள் குவித்தாா். அவருக்கு துணையாக விளையாடிய மேகஸ்வெல் 48 ரன்கள் சோ்த்தாா்.


50 ஓவா்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி சாா்பில் புவனேஷ்வா் குமாா் 4 விக்கெட்டுகளும், மொகமத் ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா். இன்றைய போட்டி மூலம் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகாகியுள்ள மொகமத் சிராஜ் 10 ஓவா்கள் பந்து வீசி 76 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளாா். விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்