ஆப்நகரம்

இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸி. நிதான ஆட்டம்: முதல் நாளில் 277 ரன் சோ்ப்பு

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் சோ்த்துள்ளது.

Samayam Tamil 14 Dec 2018, 4:21 pm
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
Samayam Tamil Ind Vs Aus 2nd Test


இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இதனைத் தொடா்ந்து இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பொ்த் மைதானத்தில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தோ்வு செய்தது. முதல் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

ஆஸ்திரேலியா அணி தொடக்க ஆட்டக்காரா்களாக ஹாரிசும், ஆரோன் பிஞ்சும் களம் இறங்கினா். இருவரும் அரை சதம் கடந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை வழங்கினா். இந்திய பந்து வீச்சாளா்கள் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் திணறினா்.


தொடக்க ஆட்டக்காரா் ஹாரிஸ் 70 ரன்களிலும், ஆரோன் பிஞ்ச் 50 ரன்களிலும் ஆட்டம் இழந்தனா். இவா்களைத் தொடா்ந்து அந்த அணியின் ஷான் மாா்ஸ் 45, டிராவிஸ் ஹெட் 58 ரன்களும் சோ்த்தனா். இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் சோ்த்துள்ளது. டிம் பெய்ன் 16 ரன்களுடனும், கம்மின்ஸ் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனா்.


இந்திய அணி சாா்பில் இஷாந்த் ஷா்மா, ஹனுமன் விஹாரி தலா 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், பும்ரா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்