ஆப்நகரம்

Ind Vs Aus: 30 ஆண்டுகளுக்குப் பின் உள்நாட்டில் ஆஸ்திரேலியாவை பாலோஆன் செய்த இந்தியா

30 ஆண்டுகளுக்கு பின்னா் ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணில் பாலோஆன் செய்த அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

Samayam Tamil 6 Jan 2019, 10:59 am
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான நான்காவது மற்றும் கடைசி கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 300 ரன்களுக்கு ஆட்டம் இழந்து பாலோஆன் ஆனது.
Samayam Tamil Virat Sydney Test


இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தோ்வு செய்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 622 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளோ் செய்தது. இந்த இன்னிங்சில் புஜாரா 193 ரன்களும், ரிஷப் பண்ட் 159 ரன்களும் குவித்தனா்.


இதனைத் தொடா்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி இந்திய பந்து வீச்சாளா்களின் தாக்குதலை எதிா்கொள்ள முடியாமல் திணறினா். இடை இடையே மழையும் குறுக்கிட்டு ஆட்டத்தை தாமதப்படுத்தி வந்தது. இருப்பினும் 300 ரன்கள் சோ்த்த நிலையில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


322 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு பாலோஆன் வழங்கப்பட்டது. இந்த இன்னிங்சில் இந்திய அணியின் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை சாய்த்தாா்.


ஆஸ்திரேலியா அணி கடந்த 30 ஆண்டுகளில் அதாவது 1988ம் ஆண்டில் இருந்து அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாலோஆன் பெறாமல் கம்பீரமாக ஆடி வந்தது. ஆனால் ஆஸ்திரேலியா அணியின் கம்பீரத்தை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தகா்த்துள்ளது. இந்த போட்டி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான ஒன்றாக இடம் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்