ஆப்நகரம்

IND vs BAN: ‘ஒருநாள், டெஸ்ட்’…போட்டிகள் எப்போது துவங்கும்? எதில் பார்க்க முடியும்? மழைபெய்ய வாய்ப்பிருக்கா?

இந்தியா, வங்கதேசம் இடையில் ஒருநாள், டெஸ்ட் தொடர் துவங்கி நடைபெறவுள்ளது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 3 Dec 2022, 6:23 am
Samayam Tamil இந்திய அணி, வங்கதேச அணி
டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று முடிந்தப் பிறகு இந்திய சீனியர் வீரர்கள், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்கவில்லை. இளம் இந்திய அணிதான் அங்கு சென்றிருந்தது.

இந்நிலையில் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்கள் ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்றவர்கள் தற்போது வங்கதேச தொடரில் விளையாட உள்ளனர்.

ஒருநாள் தொடர்:

இரு அணிகளுக்கும் இடையில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. போட்டிகள் 4, 7, 10 ஆகிய தேதிகளில் துவங்கி நடைபெறும். இந்த ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி காலை 11:30 மணிக்கு துவங்கி நடைபெறும்.

டெஸ்ட் தொடர்:

இதனைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் 14-18 ஆகிய தேதிகளிலும், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 22-26 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். இந்த டெஸ்ட் போட்டிகள் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்கி நடைபெறும்.

எதில் பார்க்க முடியும்?

இந்தியாவை தவிர்த்து வெளிநாடுகளில் நடைபெறும் இருதரப்பு தொடர்களை சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம்தான் ஒளிபரப்புவது வழக்கம். தற்போது இந்தியா, வங்கதேசம் இடையிலான தொடரையும் சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம்தான் ஒளிபரப்ப உள்ளது. சோனி லைவ் ஆப் மூலம் மொபைலிலும் போட்டியை காண முடியும்.

மழை பெய்யுமா?

வங்கதேசத்தில் மழைகாலம் சமீபத்தில்தான் முடிந்தது. இதனால், போட்டிகள் நடைபெறும் சமயத்தில் மழைபெய்ய வாய்ப்பு இருக்காது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி (ஒருநாள் தொடர்): ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவன், விராட் கோலி, ரஜத் படிதர், ஷ்ரேயஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (வி,கீ.), இஷான் கிஷன் (வி,கீ), ஷாபஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் , முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென்.

இந்திய டெஸ்ட் அணி (வங்கதேசத்திற்கு எதிராக):ரோஹித் ஷர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் (வி.கீ.), கே.எஸ்.பாரத் (வி.கீ.), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்