ஆப்நகரம்

விசாகப்பட்டின டெஸ்டுக்கு இலவச டிக்கெட்!

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ‘டிக்கெட்’ ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

TOI Sports 17 Nov 2016, 12:27 pm
விசாகப்பட்டினம்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ‘டிக்கெட்’ ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
Samayam Tamil india vs england free entry on day one of second test in vizag
விசாகப்பட்டின டெஸ்டுக்கு இலவச டிக்கெட்!


இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. இருஅணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

இது இந்த மைதானத்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி என்பதால், ரசிகர்கள் மத்தியில், ஆர்வத்தை ஏற்படுத்த ஆந்திர கிரிக்கெட் சங்கம் ரசிகர்களுக்கு இலவசமாக டிக்கெட்டுகளை வழங்க திட்டமிட்டிருந்தது. இதன்படி இன்று ரசிகர்களுக்கு இலவச டிக்கெட் வழங்க ப்பட்டது.

கூட்டம் குறைவு:
இருப்பினும் சுமார் 28,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய விசாகப்பட்டின மைதானத்தில் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்ட போதும் மைதானத்தின் பல இருக்கைகள் காலியாக காட்சியளித்தது. ஆனால் அம்மாநிலத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து 5,000க்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்