ஆப்நகரம்

மேலும் ஒரு மைல் கல் சாதனையை எட்டவுள்ள தோனி!

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் தோனி மேலும் ஒரு விக்கெட் கீப்பிங் சாதனையைப் படைக்க உள்ளார்.

Samayam Tamil 18 Feb 2018, 4:33 pm
ஜோகனஸ்பெர்க் : தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் தோனி மேலும் ஒரு விக்கெட் கீப்பிங் சாதனையைப் படைக்க உள்ளார்.
Samayam Tamil india vs south africa 1st t20i ms dhoni on brink of another major wicket keeping milestone
மேலும் ஒரு மைல் கல் சாதனையை எட்டவுள்ள தோனி!


தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தாலும், ஒருநாள் போட்டியில் 5-1 என வென்று வரலாற்று சாதனைப் படைத்தது. இந்நிலையில் இன்று முதல் டி20 போட்டி ஜோகனஸ்பெர்க்கில் நடைப்பெற உள்ளது.

தோனி சாதனை :
தோனியைப் போன்று டி.ஆர்.எஸ் கணிப்பை ஆராலும் கனிக்க முடியாது என அனைவருக்கும் தெரியும். கீப்பிங் கிங் ஆக திகழும் தோனி டி20 போட்டிகளில் இன்னும் 3 கேட்சுகள் மட்டும் பிடித்தால்,50 கேட்சுகளைப் பிடிக்கும் முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெறுவார்.

பாகிஸ்தான் கீப்பர் கம்ரான் அக்மல் 32 ஸ்டெம்பிங் செய்து முதலிடத்தில் உள்ளார். தோனி இன்னும் 4 ஸ்டெம்பிங் செய்தால் ஸ்டெம்பிங்கில் முதலிடத்தை பிடித்து விடுவார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்