ஆப்நகரம்

எதுக்கு 7 மணி மேட்ச்... ஐபிஎல் பாணியில் நடத்தப்படுமா 4 மணி மேட்ச்: விரத்தியில் ரசிகர்கள்!

கவுஹாத்தி: இந்தியா- இலங்கை அணிகள் மோதயிருந்த முதல் டி-20 போட்டி கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

Samayam Tamil 5 Jan 2020, 10:01 pm
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி கவுஹாத்தியில் நடக்கயிருந்தது. இந்நிலையில் இப்போட்டி கனமழை கரணமாக டாஸ் மட்டும் போடப்பட்டநிலையில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Samayam Tamil Virat Kohli Pitch


எதுக்கு மாலை
இந்நிலையில் இரவு 7 மணிக்கு போட்டியை நடத்த வேண்டும் என்றும் அதற்கு பதிலாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப்போல 4 மணிக்கு போட்டியை நடத்த வேண்டும் என சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர்.


ஆடுகளத்தால்

மழை நின்ற பின் போட்டியை நடத்த மைதான பராமரிப்பாளர்கள் படாதபாடு பட்டனர். மைதானத்தில் இருந்த தண்ணீரை முழுமையாக பணியாளர்கள் வெளியேற்றிய போதும் ஆடுகளத்தில் புகுந்த தண்ணீர் முழுமையாக காயாமல் ஈரமாகவே இருந்தது. இதற்காக வேக்யூம் கிளீனர், ஸ்டீம் அயன், ஹேர் டிரையர் என அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.

ஹர்பஜன் சிங் நடனம்
இதற்கிடையில் போட்டி துவங்க தாமதமானதால் மைதானத்துக்குள் வந்த இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், நடனமாடி ரசிகர்களை உற்ச்சகப்படுத்தினார். ஹர்பஜன் சிங்கின் நடனத்தைப்பார்த்த ரசிகர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர். இரு அணிகள் மோதும் இரண்டாவது டி -20 போட்டி இந்தூரில் நாளை மறுநாள் (ஜனவரி 7ஆம் தேதி) நடக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்